உள்துறை அமைச்சர் அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

கரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்து திரும்பிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் , கரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக இன்று அனுமதிக்கப்பட்டார். உள்துறை அமைச்சர் அமி்த் ஷா கரோனாவால் கடந்த 2-ம் தேதி பாதிக்கப்பட்டார்.


குர்கோவன் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையி்ல் சிகிச்சை பெற்ற அமித் ஷா கடந்த சில நாட்களுக்கு கரோனாவிலிருந்து குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி அடுத்த சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளப்போவதாக அமித் ஷா ட்வி்ட்டரில் தெரிவித்திருந்தார்.


இந்த சூழலில் கரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக இன்று அதிகாலை 2 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ஊடகப்பிரிவு தலைவர் மருத்துவர் ஆர்த்தி விஜி வெளியிட்ட அறிக்கையில், “ கடந்த சில நாட்களாக உள்துறை அமைச்சர் அமித் ஷா உடல்வலி மற்றும் உடல்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளார்.


அவருக்கு ஏற்கெனவே கரோனா பரிசோதனை செய்யப்பட்டு அது நெகட்டிவ்வாக வந்துள்ளது. இருப்பினும் கரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நல்ல உடல்நிலையில் அமித் ஷா இருக்கிறார், மருத்துவமனையில் இருந்தபடியே பணிகளை கவனித்து வருகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டது.


இதற்கிடையே எய்ம்ஸ் வட்டாரங்கள் கூறுகையில் “ எய்ம்ஸ் இயக்குநர் மருத்துவர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் அமித் ஷா இருக்கிறார். தனியாக ஒரு வார்டில் அமித் ஷா அனுமதி்க்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா