சென்னையில் மதுபானக் கடைகள் திறப்பு - தமிழக அரசு அறிவிப்பு

சென்னையில் மதுபானக் கடைகள் திறப்பது குறித்த தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழகத்தில் சென்னை பெருநக காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர மதுபான சில்லறை விற்பனை கடைகள்


7-05-2020 முதல் திறந்திட தமிழக அரசு உத்தரவிட்டு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குப்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் 18-08-2020 முதல் இயங்கும். மேலும், மால்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் மதுபானக் கடைகள் இயங்காது.


மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.


மதுபானக் கடைகளுக்கு வரும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்கவேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)