எஸ்பிபி உடல்நிலை குணமாக நாளை கூட்டு பிரார்த்தனை: பாரதிராஜா அழைப்பு

கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வரும் எஸ்பி பாலசுப்பிரமணியம் குணமாக வேண்டி நாளை மாலை 6 மணிக்கு அனைத்து தரப்பினரும் கூட்டு பிரார்த்தனை நடத்த வேண்டுமென்று இயக்குனர் பாரதிராஜா அழைப்பு விடுத்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கை அன்னையை பிரார்த்திக்கும் வகையில் இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அனைத்து திரைப்பட நடிகர் நடிகைகள் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்குப் பிடித்த எஸ்.பி.பி பாடலை ஒலிக்கவிட்டு பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.


எம்ஜிஆர் முன்பு உடல்நிலை பாதித்து வெளிநாட்டில் சிகிச்சையில் இருந்தபோது இதுபோல கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டதாகவும், இதனால் குணமாகி அவர் தமிழகம் வந்தார் என பாரதிராஜா தெரிவித்துள்ளார்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)