வங்கி வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ரூ. 5 கோடிக்கு மேல் நூதன முறையில் மோசடி

இரும்புத்திரை" சினிமாவில் இடம் பெறுவது போல, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர் கணக்கில் இருந்து நூதன முறையில் 5 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்யப்பட்டு உள்ளது.


தஞ்சையில் எஸ்.பி.ஐ, இந்தியன் வங்கிகளில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை, தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுத்துள்ளதாக வாடிக்கையாளர்கள் பலருக்கு எஸ். எம். எஸ் வந்துள்ளது.


பணத்தை பறிகொடுத்த வாடிக்கையாளர்கள், இதனால் அதிர்ச்சி அடைந்தனர். இதுதவிர, தஞ்சை - மங்களபுரம் ஸ்டேட் பாங்க் மற்றும் அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி , கனரா வங்கியிலும் 5 கோடி ரூபாய் வரை, வாடிக்கையாளர் கணக்கில் இருந்து நூதன முறையில் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது.bank cheat திருச்சி - புதூர் கிராப்பட்டி பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட ATM மையத்தில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக வாடிக்கையாளர்களுக்கு மெஸேஜ் வந்துள்ளது.


யார் பணம் எடுத்தது, ஓடிபி இல்லாமல் எப்படி பணத்தை எடுக்க முடியும், ஏடிஎம்மில் இருந்து எடுத்திருந்தால் அவர்களுக்கு பின் நம்பர் எப்படி தெரிந்தது என விசாரணை நடைபெற்று வருகிறது.