அனைத்து தனியார் மருத்துவமனையில் 25 % பொது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். முஹம்மது அபூபக்கர் எம்எல்ஏ கோரிக்கை.

கொரோனா சிகிச்சை அளிப்பதாக கூறி பொது நோயாளிகளை புறக்கணிப்பதா ? அனைத்து தனியார் மருத்துவமனையில் 25 % பொது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.


முஹம்மது அபூபக்கர் எம்எல்ஏ கோரிக்கை. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கடையநல்லூர் எம்எல்ஏ முஹம்மது அபூபக்கர் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிப்பதாக கூறி பொது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து வருகின்றனர்.


ஆகையால் அனைத்து தனியார் மருத்துவமனையில் 25% பொது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.


இது குறித்து அவர் கூறுகையில். கொரோனா தொற்று காரணம் காட்டி இருதயநோய், அவசர அறுவை சிகிச்சை, டயாலிசிஸ் செய்யும் நீரிழிவு நோய் போன்ற அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்து திருப்பி அனுப்பப்படும் நிலையில் அதிகமான நோயாளிகள் மரணிக்கும் நிலை ஏற்படுகிறது.


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தற்போது உள்ள காலத்தில் தேவையான ஒன்றுதான். அதே வேளையில் ஒரு மருத்துவமனையில் உள்ள அனைத்து அறைகளையும் கொரோனா நோயாளிகளுக்கு என்று ஒதுக்கினால் பொது நோயால் பாதிக்கப்பட்டு அவசர மேல்சிகிச்சை தேவைப்படுபவர்கள் எங்கு செல்வார்கள். உரிய நேரத்தில் மேல் சிகிச்சை கிடைக்காததால் மரணிக்கும் நிலை ஏற்படுகிறது.


ஆகையால் தமிழக அரசு இதில் கவனம் செலுத்தி தனியார் மருத்துவமனையில் 25 % அறைகளை பொது நோயால் பாதிக்கப்பட்ட அவசர மேல் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு ஒதுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தமிழக முதல்வரிடம் வைத்த இதே கோரிக்கையை சுகாதார துறை அமைச்சர், சுகாதார துறை முதன்மைச் செயலாளர் ஆகியோரிடம் வழங்கி உள்ளேன்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு