2 மாதங்களில் சென்னையில் 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது-மகேஷ் குமார் அகர்வால்

சென்னையில் கஞ்சா, குட்கா, ரவுடியிசத்தை கட்டுப்படுத்தி கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.


விநாயகர் சதுர்த்தியையொட்டிக் கடலில் சிலைகளைக் கரைப்பதைத் தடுக்க நேப்பியர் பாலம் முதல் சாந்தோம் வரை மெரினா கடற்கரையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


ஏற்பாடுகளை ஆய்வு செய்த மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சென்னைக்குள் ரவுடிகளுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்தார்.


கஞ்சா கடத்தலையும், விற்பனையையும் தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். சென்னையின் எல்லை பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்துள்ளோம்.


கடந்த 2 மாதங்களில் சுமார் 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளோம். அனைத்து போலீசாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை நகருக்குள் யாரும் சட்டவிரோத செயலில் ஈடுபட முடியாத வகையில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளோம். கஞ்சா, குட்கா, ரவுடியிசத்தை கட்டுப்படுத்தி கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்று கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!