“போதைப்பொருள் கடத்திய பா.ஜ.க மாநில நிர்வாகி” : 2 கிலோ அபினுடன் கையும் களவுமாக சிக்கிய 5 பேர் கைது!


திருச்சி அருகே 2 கிலோ அபின் கடத்தியதற்காக பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க OBC அணி மாநில செயற்குழு உறுப்பினர் லுவாங்கோ அடைக்கலராஜ், உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கொரோனா ஊரடங்கு நேரத்தை பயன்படுத்தி, திருச்சி பகுதியில் ஒரு காரில் போதை பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திருச்சி போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து டி.எஸ்.பி செந்தில்குமார் மற்றும் காமராஜ் தலைமையிலான போலிஸாசார் வாகன சோதனையில் ஈடுபட்டு அந்த காரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.


அப்போது அந்த காரை ஓட்டி வந்தது பெரம்பலூரை சேர்ந்த அடைக்கலராஜ், திருச்சி நொச்சியம் மாந்திரி மங்களத்தை சேர்ந்த ஆதடையான் என்பது தொிய வந்தது. நண்பர்களாகிய இவரையும் காரை விட்டு வௌியேற்றி காரை சோதனையிட்ட போது, காரில் அபின் போதைப்பொருள் இருந்தது தொிய வந்தது 2 கிலோ அளவிலான அபினை போலிஸார் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட அபின் போதைப்பொருளின் மதிப்பு சர்வதேச அளவில் 10 லட்சம் ரூபாய் ஆகும்.


இருவரையும் கைது செய்த போலீசார் காரையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் நண்பர்கள் இருவரும் வைத்திருந்த கார் பெரம்பலூரைச் சேர்ந்த டாக்டர் ஒருவருக்கு சொந்தமானது என்பதும், திருச்சிக்கு மீட்டிங் ஒன்றுக்காக வந்திருந்த டாக்டரிடம், அடைக்கலராஜ் தனது காரை கொடுத்து விட்டு டாக்டரின் காரை எடுத்து கொண்டு சுற்றியதும் தெரியவந்துள்ளது.


இரண்டு காரும் போலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த போதைப்பொருள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வந்தது என்பதும் பெரம்பலூரைச் சேர்ந்த பிரகாசம் என்பவர் மூலம் இவர்களுக்கு கிடைத்துள்ளதும் தொிய வந்தது.


தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் கைது செய்யப்பட்ட அடைக்கலராஜ் பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க OBCஅணி மாநில செயற்குழு உறுப்பினர் ஆவார். ஆதடையான், ஜெயபிரகாஷ், ஆறுமுகம், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 5 பேரையும் போலிஸார் கைது செய்துள்ளனர்.


தமிழக பா.ஜ.கவில் சமீப காலமாக சினிமா பிரபலங்களை கட்சியில் இணைத்தது போக ரவுடிகளை, மோசடி குற்றச்செயலில் ஈடுபடுபவர்களையும் இணைத்தற்கு கடும் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில், பா.ஜ.க மாநில நிர்வாகி ஒருவர் போதைப் பொருள் கடத்திய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த 10 ஆண்டுகளாக திருச்சியில் அபின் விற்பனை இல்லாத நிலையில் பா.ஜ.க நிர்வாகியின் இந்தக் போதைப் பொருள் கடத்தல் போலிஸார் மத்தியிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா