தலைப்பு : சுதந்திர தேசத்தின் சூப்பர் குழந்தை.. ஒரே நிமிடத்தில்... 150 லோகோக்களை சொல்லி.. சாதித்த கெவின்!


சென்னை: மெமரி.. குழந்தைகளிடம் இன்று இருக்கும் ஒரு அபாரமான திறமை.. அத்தனைக் குழந்தைகளுமே ஏதாவது ஒரு வகையில் திறமைசாலிகளாக உள்ளனர். அதிலும் ஞாபக சக்தி அதிகம் இருக்கும் குழந்தைதகளால் எத்துறையிலும் எளிதில் வெல்ல முடியும்.


அப்படிப்பட்ட ஒரு திறமையாளர்தான் நம்ம ஆர். கெவின் ராகுல். 7 வயதாகிறது ராகுலுக்கு. சென்னை டெளட்டன் ஓக்லே நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த இளம் வயதிலேயே ஒரு சூப்பர் சாதனையைப் படைத்துள்ளார் கெவின் ராகுல். அப்படி என்ன செய்து விட்டார்..


வாங்க பார்க்கலாம். ஒவ்வொரு காருக்கும் லோகோ இருக்கும்.. அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். அந்த லோகோவை வைத்து அது எந்தக் கார் என்று சொல்ல முடியும். சில லோகோக்களை நம்மால் நினைவில் வைக்க முடியும். ஆனால் ஒரே நிமிடத்தில் 150 கார்களின் லோகோக்களை கரெக்டா சொல்லி சாதனை படைத்துள்ளார் கெவின் ராகுல்.


இதுதொடர்பாக சென்னையில் ஜூன் 27ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் இந்த சாதனையைச் செய்துள்ளார் கெவின் ராகுல். இந்த சாதனை தற்போது ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் புதிய உலக சாதனையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதே சாதனையை செய்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸிலும் இடம் பெற்றுள்ளார் கெவின் ராகுல். ராஜு மற்றும் ஷகீலா ராஜு தம்பதியின் ஒரே மகன் கெவின் ராகுல். இதுபோன்ற விஷயங்களில் மட்டுமல்ல படிப்பிலும் பிரில்லியன்ட்டாக இருக்கிறார் கெவின் ராகுல் வகுப்பிலும் இவர்தான் முதல் மாணவராம்.


தனக்கும், தனது பெற்றோருக்கும், குடும்பத்துக்கும், பள்ளிக்கும் மட்டுமல்லாமல், நாட்டுக்கும் மேலும் பல பெருமைகளை கெவின் ராகுல் தேடித் தர வேண்டும் என்று ஆசிர்வதித்து அவரை பாராட்டுவோம்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு