கொள்ளையர்களுக்கு கிடைத்த ரகசிய தகவல்: ஏ.டி.எம்மில் பணம்போட வந்தவரிடம் ரூ.15 லட்சம் திருட முயற்சி- நடந்தது என்ன

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த சாகுல் அமீது. இவர் கடந்த 8-ம் தேதி நண்பகல் 2 மணி அளவில் லாயிட்ஸ் சாலை காதிகிராப்ட் அருகே உள்ள எஸ்பிஐ வங்கி ஏ.டி.எம்மில் ரூபாய் 15,47,500 பணம் போடுவதற்காக வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு இளைஞர்கள் இவரைத் தாக்கி பணப்பையை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.


அப்போது ரோந்து பணியில் இருந்த காவலர்களும், பொதுமக்களும் இருசக்கர வாகனத்தில் பணப்பையைத் திருடிய நான்கு நபர்களின் துரத்த அவர்கள் பணப்பையை போட்டுவிட்டு தப்பித்து சென்றுவிட்டனர்.


இந்த நிலையில் வழக்குப் பதிவு செய்த ராயப்பேட்டை போலீசார் சிசிடிவி காட்சி கொண்டு விசாரணை மேற்கொண்டதில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கொட்டிவாக்கம் மற்றும் பாலவக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ், சஞ்சய், ஐவின், சரவணன் ஆகிய நான்கு இளைஞர்கள் என தெரியவந்தது.


அவர்களைக் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் விக்னேஷ், சஞ்சய், ஐவின் ஆகிய 3 பேரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நீலாங்கரையில் நடைபெற்ற கொலையின் முக்கிய குற்றவாளிகள் என தெரியவந்தது.


மேலும் பணம் கொண்டு வந்த ஷாகுல் ஹமீதிடம் விசாரணை நடத்தியபோது பர்மா பஜாரில் கடை நடத்தி வரும் சையது என்பவரது பணம் என்பதும் தெரியவந்தது.


அந்த பணத்தை சாகுல் ஹமீது ஏ.டி.எம்மில் போடுவதற்கு வந்தபோதுதான் கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.


மேலும் விசாரணையில் இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூபாய் 15,47,500 பணத்தை போலீசார் கருவூலத்தில் ஒப்படைத்தனர். சாகுல் ஹமீது பணத்தை எடுத்துக்கொண்டு ராயப்பேட்டை வருவதாக பர்மா பஜாரில் வேலை செய்யும்


ஒருவர் கொள்ளையர்களுக்கு ரகசிய தகவல் கூறியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ரகசிய தகவல் கொடுத்த அந்த நபரை தேடும் பணியில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு