தஞ்சை டூ ம.பி பயணம்’ பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையுடன் நடந்தே சென்ற தம்பதிக்கு உதவிய போலீஸ்சார்!! |

பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையுடன் தஞ்சாவூரில் இருந்து நடந்தே‌ வந்த ‌வட‌ மாநிலத் தம்பதியினரை பரமத்தி வேலூர் போலீசார் மீட்டு அவ்வழியாக முறையாக ஈபாஸ் பெற்றுச் சென்ற வாகனம் மூலம் பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர்.


மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சோனு. இவர் தஞ்சாவூர் மாவட்டம் நரசிங்க பேட்டை பகுதியில் தங்கி ‌கூலி‌ வேலை பார்த்து வந்தார்.


இவரது மனைவி சரிதா. சரிதாவுக்கு ஏற்கனவே ஒன்றரை வயதில் குழந்தை உள்ள நிலையில், கடந்த ‌15 நாட்களுக்கு முன்பு ‌சரிதாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.


ஊரடங்கால் போதிய வருமானம் இல்லாமல் தவித்து வந்த இவர்கள் சோனுவின் ‌சகோதரர் வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்தனர்.


அதன் படி ஒன்றரை வயது குழந்தை மற்றும் பிறந்த 15 நாட்களே‌ ஆண் குழந்தையுடன் ‌தஞ்சாவூரில் இருந்து ‌கரூர் வழியாக நடந்தே பரமத்தி வேலூர் ‌வந்தனர். பரமத்தி வேலூர் காவிரி பாலம் சோதனைச்சாவடி வழியாக அவர்கள் வந்த போது அங்கிருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் இது குறித்து பரமத்தி வேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனிச்சாமிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


தகவலின் அடிப்படையில் அங்கு வந்த பரமத்தி வேலூர் காவல்துறை ஆய்வாளர் மனோகரன் ‌அவர்களுக்கு உணவு, பிஸ்கட் மற்றும் பால் ஆகியவற்றை ‌வழங்கி காய்ச்சல் பரிசோதனை செய்து உரிய அனுமதியுடன் பெங்களூர் நோக்கி சென்ற வாகனத்தில் ஏற்றி அனுப்பினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்