சென்னையில் 12 காவல் நிலையங்களில் சைபர் குற்றங்கள் தொடர்பாக புகார் அளிக்கலாம்: காவல் ஆணையர் உத்தரவு

சைபர் குற்றங்கள் தொடர்பான புகார் மனுக்களை சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட துணை ஆணையர் அலுவலகங்களில் கொடுக்கலாம் என்று காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். இணையதளம் மூலம் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளதால், அதில் மோசடிகளும் அதிகரித்துள்ளன.


இதேபோல் ஆபாச பதிவுகள், சாதி, மதம் போன்றவற்றின் அடிப்படையில் தவறான மற்றும் பிளவுபடுத்தும் பதிவுகள் தொடர்பான சைபர் குற்றங்களும் அதிகரித்துள்ளன. இதுவரை, சென்னை நகரத்தில் சைபர் குற்றங்கள் தொடர்பான அனைத்து புகார்களும் மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவில் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.


இதனால்,புகார்தாரர்கள் சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் பொதுமக்களின் வசதிக்காகசென்னையில் உள்ள 12 காவல்மாவட்ட தலைமையக காவல் நிலையங்களில் சைபர் பிரிவுகளைஅமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.


இதைத் தொடர்ந்து, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், காணொலி காட்சி மூலம் இந்த திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார். அதன்படி, காவல் துணை ஆணையாளர்கள் தலைமையக காவல் நிலையத்தில் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.


சென்னையில் மயிலாப்பூர் காவல் நிலையம், கீழ்ப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, மாம்பலம், அடையாறு, புனித தோமையார் மலை, அண்ணா நகர், ஆவடி, ஓட்டேரி, வடக்கு கடற்கரை, புதிய வண்ணாரப்பேட்டை, மாதவரம் பால் பண்ணை காவல் நிலையம் ஆகிய 12 காவல் நிலையங்களில் சைபர் குற்றங்கள் தொடர்பான புகார் மனுக்களை பொதுமக்கள் கொடுக்கலாம்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு