இதயத் துடிப்பு, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும் புதிய மொபைல் அறிமுகம்: விலை ரூ.1,599

உள்நாட்டு மொபைல் தயாரிப்பு நிறுவனமான லாவா, இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும் அம்சங்களுடன் புதிய மொபைலை அறிமுகம் செய்துள்ளது. பல்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது


இந்த மொபைலின் விலை ரூ. 1,599. அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் மொபைல் சில்லறை விற்பனைக் கடைகளிலும் கிடைக்கும். 2.4 இன்ச் திரையுடன் இருக்கும் இந்த மொபைலில் 32 ஜிபி வரை கொள்ளளவை மெமரி கார்ட் கொண்டு விரிவாக்கிக் கொள்ளலாம். எஃப்.எம் ரேடியோ மற்றும் இரண்டு சிம் வசதிகளையும் கொண்டுள்ளது.


1800எம்.ஏ.ஹெச் அளவு பேட்டரி கொண்ட இந்த மொபைலை ஒரு முறை சார்ஜ் செய்தால் ஆறு நாட்கள் வரை சார்ஜ் இருக்கும். தானாகா அழைப்புகளைப் பதிவு செய்யும் வசதி, ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட 7 மொழிகள் வரை டைப் செய்யும் வசதிகளும் இதில் உள்ளன.


இந்த மொபைல் பற்றிய செய்தி அறிக்கையில், "ஒரு இந்திய பிராண்டாக, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அர்த்தமுள்ள பொருட்களை வழங்க வேண்டும் என்பது எங்களது தொடர் முயற்சி. அதுவும் குறிப்பாக இப்போது நிலவும் பதட்டமான சூழலில். இந்த மொபைல் இராணுவ தர சான்றிதழ் பெற்றது. அப்படியென்றால் மொபைல் கீழே விழுவதால் ஏற்படும் சின்ன சின்ன பாதிப்புகள் மொபைலை ஒன்றும் செய்யாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு