நடிகர் எஸ் வி சேகர் தேசிய அவமதிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணைக்காக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜர்

தேசியக் கொடியை அவமதித்தாக புகார் எழுந்த விவகாரத்தில் நடிகர் எஸ்.வி. சேகரிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.


தேசியக் கொடியை அவமதித்து பேசி, சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட் டதாக எஸ்.வி சேகர் மீது தேசிய அவமதிப்பு தடுப்பு சட்டத் தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இந்த வழக்கில் சம்மனை ஏற்று ஆஜரான எஸ்.வி.சேகரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மீண்டும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஆஜராகும் படி, எஸ்வி சேகர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.


இதற்கிடையே, ஜாமீன் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி. சேகர் தாக்கல் செய்த முன்ஜாமீன்மனு, மீதான விசாரணையை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்