காவல் ஆய்வாளரை ஊக்குவித்து விதமாக நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்த மாவட்ட ஆட்சியர்

கடமை தவறாது தாய்நாடு மீது பற்று மிகுந்த காவல் ஆய்வாளரை ஊக்குவிக்கும் விதமாக நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்த மாவட்ட ஆட்சியர் அவர்கள்.


திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திருமதி மகேஸ்வரி அவர்களின் தந்தை திரு. நாராயணசாமி அவர்கள் சுதந்திர தினத்திற்கு முந்திய நாள் இரவு உடல்நிலை சரியில்லாத நிலையில் உயிரிழந்தார்.


தனது தந்தை உயிரிழந்த போதிலும் அதனை யாரிடமும் தெரிவிக்காமல் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழா அணிவகுப்பு மரியாதையை தலைமை ஏற்று பணியில் ஈடுபட்டார்.


பின்பு காவல்துறை அணிவகுப்பு மரியாதை முடித்த பிறகு தந்தையின் இறுதிச் சடங்கிற்கு திண்டுக்கல் புறப்பட்டு சென்றார்.


தனது தந்தை உயிரிழந்ததை தெரிந்தும் கடமை தவறாது தாய் நாடு மீது கொண்ட பற்றால், பணி செய்த கண்ணியமிக்க காவல்துறை ஆய்வாளர் திருமதி. மகேஸ்வரி அவர்களை ஊக்குவிக்கும் விதமாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திருமதி. ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.