உலக மனிதநேய அமைப்பால் கொரோனா காலத்தில் சிறப்பாக செயலாற்றியதற்கு திருச்சி கோவிட் நிவாரண குழுவிற்கு சிறந்த சமுக நல்வாழ்வு சேவைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கோவிட்-19 நோய் தொற்று காரணமாக ஊரடங்கு தொடங்கப்பட்ட மார்ச் 23ம் தேதி ஒரே ஒர் வாட்சப் குழுமமாக தொடங்கப்பட்ட இந்த குழுமம் சமுக ஆர்வலர்கள் திண்டிவனம் அஹ்மத், ரியாஸ், பல்லாவரம் பகுதியை சார்ந்த ரசாக், செங்குன்றம் பகுதியை சார்ந்த தமீம் அன்சாரி, பாலாஜி, ஐபெல்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் ஆதில் மற்றும் இர்சாத் திருச்சியை சேர்ந்த அப்ரார், சவூதி அரேபியாவில் பணிபுரியும் சென்னை புளியந்தோப்பு பகுதியை சார்ந்த சுலைமான் மற்றும் சென்னயை சார்ந்த அன்சர், தாஜுதீன், தமிழுதின், ஜுனைத், இஸ்மாயில் மற்றும் தாம்பரத்தில் இருந்த கல்லூரி மாணவர்களான இர்பான், சுலைமான் மற்றும் பல தன்னார்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமுக ஆர்வலர்களை கொண்டு இந்த ஒருங்கினைப்பு குழு உருவாக்கப்பட்டது.


இந்த ஒருங்கினைப்பு குழுவின் மூலம் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் செயல்படும் தொண்டு நிறுவனங்கள், சிறு குழுக்கள், தன்னார்வலர்களை ஒன்றிணைத்து அவர்கள் செய்ய வேண்டிய சேவைகளை ஒருங்கிணைப்பது, அவர்கள் தேவையான உதவிகளை வழங்குவது. தேவையுள்ளோரை கண்டறிந்து தொண்டு நிறுவனங்களிடம் அவர்களை பற்றிய தகவலை தெரிவித்து அவர்களுக்கு தேவையான உதவிகள் சென்று சேர்வதை உறுதி செய்யும் பணியை மேற்கொண்டது.


இக்குழுவில் தமிழகம் முழுவதிலும் இருந்து எம்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து பணியாற்றுகின்றன. கோவிட் நிவாரண குழுவின் வாயிலாக ஊரடங்கில் பாதிக்கப்பட்ட திண்டிவனம் சுற்றியுள்ள கிராமங்களில் முஹம்மத்பூர், தீன்பூர் கிராமங்களில் உள்ள முந்நூறு குடும்பங்கள் உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் மூலமாக பண்ணிரண்டு ஆயிரத்திற்த்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கில் பசியால் வாடிய மக்களுக்கு தமிழகமெங்கும் சுமார் இரண்டு லட்சம் உணவு பொட்டலங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.


புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆயிரத்து ஐநூறு பேர் தங்கள் சொந்த ஊர் திரும்ப வேண்டிய முயற்சிகளை இளம் கல்லூரி மாணவர் இர்பான் (பதினெட்டு வயது) ஒருங்கினைப்பாளராக நியமித்து அவர் மூலமாக வாகன வசதிகளை ஒருங்கினைத்து அவர்கள் பயணத்திற்கு தேவையான உதவிகளை செய்தது. திருச்சி மாநகர பகுதியில் உள்ள அரியமங்கலம், காட்டூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் இலவசமாக உணவுகள் மற்றும் மருத்துவம் மற்றும் கொரோனா நோயை எப்படி தடுப்பது குறித்து பல்வேறு ஆலோசனை நடத்தினார்கள்.


இந்த ஊரடங்கு மூலமாக பல்வேறு இளைஞர்கள் இந்த அமைப்பு மூலமாக பல்வேறு சமூக மணிகளை தொடர்ந்து செய்து வருவதோடு வாட்ஸ் ஆப் மூலம் வீட்டில் இருந்தபடி Zoom ஆப் மூலம் அடுத்த கட்ட பணிகளை என்னென்ன செய்ய வேண்டும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதோடு மக்களுக்கு இந்த நோயில் இருந்து எப்படியெல்லாம் விலகி இருக்க வேண்டும் என்பதும் வீட்டில் எப்படி தனிமையில் இருக்க வேண்டும் என்பதை தொடர்ந்து ஆலோசனை செய்து ஆப் மூலமாக மக்களுக்கு சொல்லி வருகிறார்கள் இக்குழுவில் தமிழகம் முழுவதிலும் இருந்து எம்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து பணியாற்றுகின்றன. கோவிட் நிவாரண குழுவின் வாயிலாக ஊரடங்கில் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.


ஊரடங்கில் பசியால் வாடிய மக்களுக்கு தமிழகமெங்கும் சுமார் இரண்டு லட்சம் உணவு பொட்டலங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆயிரத்து ஐநூறு பேர் தங்கள் சொந்த ஊர் திரும்ப வாகன வசதி செய்து அவர்கள் பயணத்திற்கு தேவையான உதவிகளை செய்தது. மேலும் பல வாட்சப் குழுமங்கள் மூலமாக பல துறை வல்லுநர்களை ஒன்றினைத்து ஊரடங்கினால் திசை மாறிய மக்களுக்கு வழிகாட்டும் விதமாக கல்வி வழிகாட்டுதல், வேலை வாய்ப்பு உதவிகள், வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்ப இருக்கும் மக்களுக்கான உதவிகள், இரத்த தான உதவிகள், கோவிட்-19 நோய் தொற்றால் இறந்தவர்களை அடக்கம் செய்ய WHO அறிவுறுத்தல் படி அடக்கம் செய்ய அலோசனை மற்றும் உதவிகள் உட்பட பதினெட்டு துறைகளில் வல்லுநர்கள் உதவியுடன் செயல்பட்டு வருகிறது.


கோவிட் நுண்ணுயிரி பரவல் காரணமாக உலகம் முழுவதும் முடங்கிய நிலையில் எண்ணற்ற அதனால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற மக்களுக்கு தேவையான உதவிகளை அரசுகளும் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து வழங்கி வருகின்றனர். இவ்வாறு மனிதநேயத்தோடு உதவும் பல துறை வல்லுநர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னாவலர்களை கவுரவிக்கும் வகையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து செயல்படும் உலக மனிதநேய அமைப்பின் சார்பாக ஸ்டார்ஸ் ஆப் கோவிட் என்ற விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதற்கு உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு வல்லுநர்கள், அரசியல் அளுமைகள், தொண்டு அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதில் இந்தியாவில் இருந்து பல வல்லுநர்கள் மற்றும் குழுக்கள் விருது வழங்கும் பட்டியலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.


சிறந்த நல்வாழ்வு சேவை புரிந்தமைக்காக இரண்டு அமைப்புகள் இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் தமிழகத்தை சார்ந்த கோவிட் நிவாரண குழு அவ்விருதினை பெற்றது. லண்டனில் இருந்து இனைய வழியில் நடைபெற்ற இவ்விழாவில் உலகம் முழுவதும் கோவிட் நோய் தொற்று காலத்தில் சிறப்பாக செயற்பட்ட நூறு வல்லுநர்கள் மற்றும் அமைப்புகளுக்கு பல்வேறு தலைப்புகளில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.


இந்த சேவைகள் எல்லாவற்றையும் பாராட்டி உலக மனிதநேய அமைப்பு கோவிட் நிவாரண குழுவிற்கு சிறந்த சமுக நல்வாழ்விற்கான சர்வதேச விருதினை வழங்கி பாரட்டியது. கோவிட் நிவாரண குழுவில் எம்பதுக்கும் மேற்ப்பட்ட அமைப்புகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் இனைந்து செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஊடகவியலாளர்கள், சமூக சேவகர்கள்,இவ்விருது அவர்கள் அனைவருக்கும் ஊக்கம் தரக்கூடியதாக உலக மனிதநேய அமைப்பிற்கு நன்றி தெரிவித்தனர்.


விருது வழங்கும் விழாவில் நேபாள நாட்டின் முன்னாள் அதிபர் பத்மிர் சேஜ்டியு, உலக மனிதநேய அமைப்பின் நிறுவனர் அப்துல் பாசித் சையத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா