முககவசம் இன்றி சென்றவரை பிடித்து.. போலீஸ் தாக்குதல்..! காயல்பட்டின கலகம்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் முககவசம் இன்றி வெளியில் சென்ற இளைஞர் ஒருவரை காவல் நிலையம் அழைத்து சென்று கடுமையாக தாக்கியதால் அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த அத்துமீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களால், நாடே அதிர்ந்து கிடக்கும் நிலையில் அருகில் உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்திலும் இதே பாணியில் அத்துமீறல் நடந்ததாக புதிய புகார் ஒன்று எழுந்துள்ளது.


கடந்த ஜூன் 9ந்தேதி நடந்ததாக கூறப்படும் புகார் குறித்த விவரம் இது தான். காயல்பட்டினத்தை சேர்ந்த 32 வயதான முகமது ஹபீப் என்பவர் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கின்ற தடைசெய்யப்பட்ட பகுதி வழியாக முககவசம் இன்றி நடந்து சென்றதாக கூறப்படுகின்றது.


அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் சரவணன் என்பவர் வரை அழைத்து எச்சரித்து லத்தியால் அடித்ததாகவும்,எதிர்த்து பேசியதால் காவல் நிலையம் அழைத்து சென்று சரவணன் உள்பட 4 பேர் சேர்ந்து தாக்கியதோடு இது பற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் முகமது ஹபீப் தனது புகாரின் தெரிவித்துள்ளார் காவல் துறையினர் தாக்கியதால் ஏற்பட்ட காயங்களுடன் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்ட முகமது ஹபீப், தன்னை 4 போலீசார் தாக்கியதாக கூறியுள்ளார்.


அங்குள்ள பதிவுகளில் அது குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முகமது ஹபீப்பை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த போலீசார் அம்புலன்ஸில் ஏற விடாமல் தடுத்து மிரட்டி அனுப்பியதாக கூறப்படுகின்றது.


இதனால்வீட்டுக்கு செல்வதாக கூறி நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக் சேர்க்கப்பட்ட முகஹமது ஹபீப்பை சோதித்த மருத்துவர்கள், அவரது கிட்னி கடுமையாக பதிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.


இது தொடர்பக சிகிச்சையில் இருந்து வந்ததும் முகமது ஹபீப் குடும்பத்தினர் திருச்செந்தூர் டி.எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டு குறித்து காவல் உதவி ஆய்வாள்ர் சரவணனிடம் விளக்கம் கேட்ட போது, முகமது ஹபீப் ஏற்கனவே சிறுநீரக நோயாளி என்றும் தாங்கள் அவரை தாக்கவில்லை என்பதை மலுப்பலாக தெரிவித்த சரவணன், இந்த புகார் குறித்து ஆறுமுகநேரி டி.எஸ்.பி விசாரணை நடத்தி வருவதாக கூறி தொடர்ந்து பேச மறுத்து விட்டார். காவல் துறையினர் மீது அடுத்தடுத்து எழுந்துவரும் புகார்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)