வட்டி கொடுக்கச் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நிதிநிறுவன அதிபர்

வட்டி பணம் கொடுக்க வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்ட தனியார் நிதி நிறுவன அதிபருக்கு 34 ஆண்டு சிறையும் 13 ஆயிரம் அபாரதமும் விதித்து


நாமக்கல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த 50 வயது பெண்மணி தனது குடும்ப செலவுக்காக பள்ளிபாளையம் அக்ரஹரம் பகுதியை சேர்ந்த நிதி நிறுவன அதிபரிடம் கடந்த 2009-ம் ஆண்டு கடன் வாங்கியுள்ளார்.


அதற்கான வட்டி தொகையை மாத மாதம் செலுத்தி வந்துள்ளார். அதன்படி கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி வட்டி தொகையை செலுத்த அப்பெண்மணி தனது 19 வயது மகளிடம் பணத்தை கொடுத்து அனுப்பி உள்ளார்.


நிதி நிறுவனத்திற்கு சென்ற அப்பெண்ணை நிதிநிறுவன அதிபர் சிவகுமாரும், அவரது நண்பர் ரவி என்பவரும் பாலியல் வன்கொடுமை செய்து அப்பெண்ணை நிர்வாணமாக வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.


பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் பள்ளிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில் இவ்வழக்கு நாமக்கல் சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டு வழக்கு நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.


வழக்கு விசாரணை நடைபெற்ற போது வழக்கில் 2-ம் குற்றவாளியான ரவி உயிரிழந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் நிதி நிறுவன அதிபருக்கு சிவக்குமாருக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனையும், 13 ஆயிரம் அபராதம் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 லட்ச ரூபாய் நிவாரணமும் வழங்கிட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)