லண்டனில் உள்ள உலக மனிதநேய அமைப்பு சார்பில் கொரோனா பணிக்காக சிறந்த மக்கள் தூதர் விருது பெற்ற இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம் காதர்மொகிதீன் வாழ்த்து

இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது : இங்கிலாந்து நாட்டின் தலைநகரமாக உள்ள லண்டனில் தலைமையிடமாக கொண்ட உலக மனித நேய அமைப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி அவர்களை இந்த ஆண்டிற்கான சிறந்த மக்கள் தூதர் என்ற விருந்தினை நேற்று இரவு விருது பெற்றார்.


இது உலக அளவில் நான்கு பேரில் ஒருவர் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி ஆவார். இந்த விருதுக்கான பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனியை தேர்வு செய்யப்பட்டதற்கான மிக முக்கிய காரணமே தற்சமயம் உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் என்ற கொடிய நோய் பரவி வரும் சூழ்நிலையில் அவர் மக்களுக்கு ஆற்றி சிறப்பான சேவையை கௌவரவிக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் எனது நல்வாழ்த்துக்களை பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனிக்கு தெரிப்பதோடு அவருக்கு கிடைத்துள்ள இந்த கௌரவம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்க்கே பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது.


நான் எல்லாம் வல்லாஹ் இறைவனிடம் வேண்டிய கொள்வது எல்லாம் இறைவனின் அருள் நவாஸ்கனிக்கு அவர்களுக்கு தொடர்ந்து அளித்த அவர் தொடர்ந்து மனித நேய மிக்க அவரது தொண்டு பொதுமக்களுக்கு தொடர்ந்து கிடைத்திட எல்லாம் வல்லாஹ் இறைவனை நல்அருள் புரியும்படி வேண்டிய கொள்கிறேன் இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு