உண்மை குற்றவாளியை உடனடியாக கைது செய்து கடும் தண்டனை வழங்க நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் வலியுறுத்தல்!!

திருச்சி அருகே இயற்கை தேவைக்காக சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி எரித்து படுகொலை! உண்மை குற்றவாளியை உடனடியாக கைது செய்து கடும் தண்டனை வழங்க நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் வலியுறுத்தல்!!


இதுகுறித்து நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF)மாநில செயலாளர் ஷிஃபா வெளியிட்டுள்ள அறிக்கையில் சில தினங்களுக்கு முன் புதுக்கோட்டை 7 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்யப்பட்ட கொடூரம் அடங்குவதற்குள் மீண்டும் ஒரு கொடூரம் நடந்தேறியிருக்கின்றது சமீபகாலமாக பெண் குழந்தைகள், சிறுமிகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள்,வன்கொடுமைகள் கற்பழிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன.


இச்சம்பவங்கள் பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் ஒவ்வொரு பெற்றோரின் உள்ளத்திலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் நந்தினி பாலியல் வன்கொடுமை செய்து எரித்துப் படுகொலை ,சில மாதங்களுக்கு முன் விழுப்புரத்தில் பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ முன்பகை காரணமாக உயிரோடு எரித்து படுகொலை தற்போது திருச்சி மாணவி என பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.


வீதியில் விளையாடி கொண்டிருந்த குழந்தை, இயற்கை உபாதைக்கு வெளியே சென்ற சிறுமி என பெண் குழந்தைகளுக்கு எங்கும் பாதுகாப்பில்லாத சூழல்களே நிலவுகின்றது இன்றும் பல கிராமங்களில் இயற்கை தேவைக்காக காடுகளுக்கு செல்லக்கூடிய இந்த அவலநிலை மாற்றப்பட வேண்டும் தமிழக அரசு அவர்களின் சமூக சூழல்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களை அறிவிக்க வேண்டும்.அதேபோல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதன் மூலம் இத்தகைய கொடூர குற்றங்களை தடுத்து நிறுத்த முடியும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)