சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.


இந்த வழக்கில் சாத்தான் குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 போலீசார் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து தீவிரமாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆய்வாளர் ஸ்ரீதர் முதுகுவலி எனக்கூறி, கடந்த 23-ம் தேதி ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.


தொடர்ந்து, அவருக்கு உடலில் எவ்வித பிரச்சனையும் இல்லை என மருத்துவர்கள் கூறிய நிலையிலும், மீண்டும் இடது கை வலிப்பதாக கூறி அவர் சிகிச்சை பெற்று வந்தார்.


இதையடுத்து, அவர் இன்று மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.