சென்னை: எப்படித் தேர்வானார் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்..

சென்னை போலீஸ் கமிஷனராக ஏ.கே.விஸ்வநாதன், 2017-ம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டார். போலீஸ் கமிஷனரான ஏ.கே.விஸ்வநாதன், சென்னையை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். அதே சமயத்தில், சமூகப் பணியிலும் சிறப்பாக செயல்பட்ட ஏ.கே.விஸ்வநாதனுக்கு, பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயரும் கிடைத்தது. அதோடு சென்சிட்டிவ்வான பிரச்னைகளின்போது நேரில் செல்வதை ஏ.கே.விஸ்வநாதன் வழக்கமாக வைத்திருந்தார்.


காவல்துறையினரால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், காவல்துறையினரின் நலனிலும் அக்கறை செலுத்திவந்தார்.சென்னை போலீஸ் கமிஷனர் பதவியில் 3 ஆண்டுகளாக பணியாற்றிய ஏ.கே.விஸ்வநாதன், இடமாறுதல் செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அதனால் சென்னை போலீஸ் கமிஷனர் பதவிக்கான காயை ஐபிஎஸ் அதிகாரிகள் நகர்த்திவந்தனர்.


சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால், தொடர்ந்து மூன்றாண்டுகள் கமிஷனராகப் பணியாற்றியதால் கொஞ்சம் ரிலாக்ஸாகப் பணியாற்ற ஏ.கே.விஸ்வநாதன் விரும்பியதாகச் சொல்லப்படுகிறது. அதனால்தான், அவரை மகேஷ்குமார் அகர்வால் பணியாற்றிய இடமாக operation பிரிவுக்கு இடமாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.கமிஷனராக யாரை நியமிக்கலாம் என்று ஆலோசனை நடந்தபோது, ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வாலின் பெயரை ஆளுங்கட்சிக்கு நெருக்கமான ஐபிஎஸ் அதிகாரிகள் சிலர் முன்மொழிந்ததாகத் தெரிகிறது. அப்போது அந்த ஐபிஎஸ் ஆபீஸர்கள், மகேஷ்குமார் அகர்வால் குறித்து விளக்கமாக விவரித்துள்ளனர்.


அதன்பிறகே, மகேஷ்குமார் அகர்வாலுக்கு க்ரீன் சிக்னல் கொடுக்கப்பட்டு அவரை கமிஷனராக நியமித்ததாகச் சொல்கிறார்கள். ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். 1972-ம் ஆண்டு பிறந்த மகேஷ்குமார் அகர்வாலின் தந்தை, வழக்கறிஞர். அதனால் சட்டம் பயின்ற அவர், தன்னுடைய 22-ம் வயதில் 1994-ம் ஆண்டு, சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சிபெற்று ஐபிஎஸ்தேனி எஸ்பி-யாக இவர் பணியாற்றி, பின்னர் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி-யாக இடமாற்றம் செய்யப்பட்டார். அதன்பிறகு, 2001-ம் ஆண்டு சென்னைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.


சென்னை பூக்கடை துணை கமிஷனராக நியமிக்கப்பட்ட மகேஷ்குமார் அகர்வால், போக்குவரத்து பிரிவில் துணை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். அயல்பணியாக சிபிஐ அதிகாரியாக 10 ஆண்டுகள் பல மாநிலங்களில் பணியாற்றினார்.அதன்பிறகு மீண்டும் சென்னைக்கு மாறுதலாகினார். ஐஜி-யாக சிபிசிஐடி-யில் பணியாற்றினார்.


அடுத்து மதுரை கமிஷனர், சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனராகப் பணியாற்றினார். சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் விடுப்பில் சென்ற காலக்கட்டத்தில், போலீஸ் கமிஷனர் பொறுப்பையும் கவனித்துவந்தார். பின்னர், டிஜிபி அலுவலகத்தில் (operation) செயலாக்கப்பிரிவு ஏடிஜிபி-யாகப் பணியாற்றிவந்தார். கொரோனா தடுப்பு வடக்கு மண்டல அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர், சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.