காயல் பட்டிணத்தில் முக கவசம் அணியாத காரணத்தால் இளைஞர் மீது காவல் துறையினர் தாக்குதல் : காயல் அப்பாஸ் கடும் கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம், காயல் பட்டிணத்தை சேர்ந்த கபீப் முகமது என்பவர் கடந்த ஜீன் ஓன்பதாம் தேதி அன்று காயல் பட்டிணம் குத்துக்கல் தெருவில் அமைக்க பட்டிருந்த கொரோனா கட்டு பாட்டு வழியாக முககவசம் அணியாமல் சென்ற காரணத்தினால் ஹபீப் முகமதுவை ஆறுமுகநேரி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மிகவும் கடுமையான முறையில் தாக்குதல் நடத்திய காவல் துறையினரின் இத்தகை செயலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது .


மேலும் காவல் துறையினரின் இத்தாக்குதலில் அவரின் சிறுநீரகம் மிகவும் பாதிக்கபட்டு நெல்லையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறார் . என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது . மேலும் உடல் நிலம் பாதிக்கபட்ட ஹபீப் ரஹ்மான் அன்றைய தின மே காயல் பட்டிணம் அரசு மருத்துவமனைக்கு சென்று தனக்கு எவ்வாறு இந்த காயங்கள் ஏற்ப்பட்டன என்பதை தெரிவித்து சிகிச்சை பெற்றுள்ளார் காயல் பட்டினம் அரசு மருத்துவ மனையின் விபத்துக்கள் பதிவேட்டில் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் நான்கு பேர் சேர்ந்து தாக்குதல் நடத்தியதாக ஹபீப் முகமது கூறியது பதிவாகியுள்ளது. என்கிற செய்தி வெளியாகி உள்ளன.


ஹபீப் முகமது முக கவசம் அணியாமல் வந்திருந்தால் காவல் துறையினர் சட்டபடி அவர் மீது நடவடிக்கை எடுத்து இருக்கலாம் ஆனால் அதை செய்யாமல் . அப்பாவி ஹபீப் முகமதுவை காவல் நிலைத்திற்கு அழைத்து சென்று காவல் துறையினர் கடுமையாக தாக்குதல் நடத்தும் அளவிற்கு அவர் என்ன பெரிய குற்றம் செய்தார் ? அல்லது இஸ்லாமியர் என்பதுனால் காவல் துறையினர் இந்த கொடூர தாக்குதல் நடத்தினார்களா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது ?


எனவே : ஹபீப் முகமதை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மிகவும் கொடூர தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீது எந்த வித பாரம் பட்சம் பாராமல் தமிழக அரசு வழக்கு பதிவு செய்து நீதீ மன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தாக்குதல் நடத்திய காவல் துறையினரை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும்.


இச்சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையம் தானாக முன் வந்து உரிய விசாரணை நடத்த வேண்டும் , பாதிக்க பட்ட ஹபீப் முகமதுவின் மருத்துவ செலவுகளை தமிழக அரசு பொற்பு ஏற்க வேண்டும். பாதிக்க பட்ட இளைஞர் ஹபீப் முகமதுக்கு இழப்பிடு ரூ 20 லட்சம் வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.