கொரோனா வைரஸ் ஒழிக்க யுனானி முறையில் சிறந்த மருத்துவம் - அரசு அங்கீகரிக்க சமூக ஆர்வலர் காஞ்சி அ அயுப்கான் கோரிக்கை.

உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் தொற்று நோயான covid-19 ஐ விரட்ட பலதரப்பட்ட அமைப்பினர் vaccine தடுப்பு மருந்து கண்டு பிடிக்க போராடி வருகின்றனர். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஆயூஷ் மருத்துவர்கள் சித்தா ஆயுர்வேதா யுனானி ஹோமியோபதி மற்றும் யோகா வல்லுனர்களைகொண்டு covid-19 நோயை கட்டுப்படுத்தலாம் என்று பலதரப்பட்ட முயற்சிகள் செய்து அதில் வெற்றி கண்டு வருகின்றனர்.


இந்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கிழ் இந்திய மருத்துவத்தில் பல மருத்தவம் சேர்ந்தது அதில் யுனானி - யும் ஒன்று. இந்த யுனானி மருத்துவத்தில் அனைத்து தரப்பு வியாதிகளும் குணப்படுத்த பட்டு வருகிறது. இந்த யுனானி மருத்துவத்தில் தமிழக அரசு பல மருத்துவர்களை வருடந்தோறும் உருவாக்கி வருகின்றது.


யுனானி மருத்துவம் அரசினால் மற்றும் தமிழ்நாடு டாக்டர்எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். இந்த யுனானி மருத்துவத்தில் முற்றிலுமாக கொரானா வைரஸ் நோயால் பாதிக்கபட்டவார்களை சிகைச்சி அளித்து கொரனா பரவதல் மிக விரைவில் கட்டுப்படுத்த முடியும் என யுனானி மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் டாக்டர் ஹக்கிம் தாவூத் அவர்கள் உறுதியளிக்கிறார்.


இத்தகைய மருத்துவர்களின் மகத்தான பணியினை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென காஞ்சிபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் காஞ்சி அ அயுப்கான் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-


சென்னை பெரியமேடு வை சேர்ந்த இளங்கலை யூனானி மற்றும் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ஹகிம் தாவூத் என்பவர் யுனானி மருத்துவத்தில் கைதேர்ந்த நிபுணர் ஆவார்.


அவர் இந்த இக்கட்டான சமயத்தில் யுனானி மருத்துவ முறையில் கொரானா நோயை கட்டுப்படுத்த முடியும் என்றும் சித்த மருத்துவத் துறை மருத்துவர்களை கோவிட்19 வார்டு ஒதுக்கி மருத்துவம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ள தைப்போல் யுனானி மருத்துவர்களுக்கும் அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டு தனியாக covid-19 பாதித்த நோயாளிகளின் வார்டு களை ஒதுக்கி கொடுத்தால் பொதுமக்கள் நலம் பெறுவர் என யுனானி மருத்துவத்துறையில் ஏற்கனவே 200க்கும் மேற்பட்ட நபர்களை குணம் ஆக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மற்றும் நோயாளிகளை குணபடுத்திய ஆதாரமும் உள்ளது என்கிறார்.


மேலும் இந்த வியாதிக்கு இத்தகைய மருத்துவ சிகிச்சை முறையை மேற்கொண்டால் சிறப்பானதாக இருக்கும் என ஒவ்வொரு நாட்களின் குறிப்புகள், உணவு முறை என விலாவரியாக தனது மருத்துவ குறிப்பில் குறித்து வைத்து மருத்துவம் பார்த்து வருகிறார் என்பது மிகச் சிறந்த விஷயமாகும்.


ஆகவே தமிழக அரசு இத்தகைய யுனானி முறையிலான மருத்துவத்தை அங்கீகரித்து அதற்காக கொரானா covid-19 வார்டுகள் கொடுத்து பொதுமக்கள் பயன் பெற வழிவகை செய்ய வேண்டும் என சமுக ஆர்வலர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இது விஷயமாக டாக்டர் ஹக்கீம் தாவூத் அவர்கள் ஆயுஷ் டைரக்டர் கணேஷ் IAS அவர்களிடம் 03/07/2020 தேதி அன்று கொடுத்த விண்ணப்பத்தில் covid-19 கொரானா வார்டை ஒதுக்கிக் கொடுத்து தனது மருத்துவ சேவையினை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாறும் மற்றும் இது சார்ந்து சென்னை மாநகர கமிஷனர் G பிரகாஷ்IAS அவர்களிடம் 19/06/2020தேதி அன்று கடிதம் அளித்துள்ளார்.


ஆகவே தானாக முன்வந்து மருத்துவ சேவையாற்ற நினைக்கும் மருத்துவர் ஹக்கீம் தாவுத் அவர்களுக்கும் சித்த மருத்துவத்துறை மருத்துவர் வீரபாபு அவர்களுக்கு கோவிட் 19 வார்டு ஒதுக்கி மருத்துவ சேவைசெய்ய தமிழக அரசு அனுமதித்துள்ளதைப் போல் தொண்டு உள்ளத்துடன் செயல்பட துடிக்கும் யுனானி மருத்துவர் ஹக்கீம் தாவூத் அவர்களையும் தமிழக அரசு இணைத்து கொரானா covid-19 மருத்துவ சேவைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் அவர்களுக்கு சமூக ஆர்வலர் காஞ்சி அ அயுப்கான் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


எது எப்படியோ யுனானி முறையோ, சித்த முறையோ, ஆங்கில மருத்துவ முறையோ கொரானா என்ற அரக்கனை இந்த உலகத்தில் இருந்து விரட்டினாள் போதும் என்ற உணர்விலேயே அனைத்து தரப்பு மக்களும் இருக்கின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்