நெல்லையில் இன்னொரு பெருமையும் மறைந்தது

வடக்கே ஒரு காசி இருப்பதுபோல் தெற்கே ஒரு தென்காசி அதுபோல் வடக்கே ஒரு திருவண்ணாமலை இருப்பதுபோல் தெற்கின் தென் திருவண்ணாமலை என்ற பெருமையை உடையது


நெல்லை திருவண்ணாமலை என அழைக்கப்படும் அண்ணாமலை புதூர் அருள்மிகு அண்ணாமலையாா் உடனுறை உண்ணாமலையம்பாள்திருக்கோவில் அக்கோவிலில் வருடந்தோறும் தீபத்திருநாளன்று திருவண்ணாமலையில் நடப்பது போன்றே அனைத்து நடைமுறைகளும் இக்கோயிலில் நடக்கும் இக்காவிலின் வெகுசிறப்பு என்னவென்றால் தீபத்திருநாளன்று நள்ளிரவு 3 மணிக்கு தலையில் தீபம் ஏற்றி மறுநாள் காலை 11 மணிவரை அனைத்து வீடுகளுக்கும் சென்று பக்தர்களுக்கு தரிசனம் தருவார் பெரியசாமி என்று அழைக்கப்படும் இவா்.


இவர் நேற்று இரவு 2.30 மணிளவில் இறைவனடி சோ்ந்தாா். அவரது இறப்பு செய்தி அறிந்த சுற்று வட்டார கிராம மக்கள் மிக அதிர்ச்சியுடனும் மனவேதனையுடன் இருக்கிறார்கள். அவரது நல்லடக்கம் நண்பகல் 2 மணியளவில் நடைபெறும் என்பதை மன வருத்தத்துடன் தெரிவிதகதுக்கொள்கிறோம்.