ஈரோட்டில், விசாரணைக்காக வந்தவர், காவல் நிலையம் முன்பே அரிவாளால் வெட்ப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஒலகடம், கொலந்தபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கொடுக்கல் - வாங்கல் பிரச்சனை தொடர்பாக புகார் கொடுத்தையடுத்து, வெள்ளி திருப்பூர் காவல்நிலைய போலீசார் செல்வத்தை காவல்நிலையத்திற்கு அழைத்துள்ளனர். இதையடுத்து செல்வம் தனது உறவினரான சின்னராமகவுண்டனர் மற்றும் தம்பி மாது ஆகியோருடன் காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார்.


அப்போது அங்கிருந்த போலீசார் வேறொரு புகாரை விசாரித்து கொண்டிருப்பதன் காரணமாக அவர்களை வெளியே நிற்கச் சொல்லியுள்ளனர். இதையடுத்து அவர்களும் காவல் நிலையத்திற்கு வெளியே உள்ள மரத்திற்கு அடியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.


அப்போது அந்த இடத்திற்கு வந்த நபர் ஒருவர், மறைத்து வைத்திருந்த அரிவாளால் சின்ன ராமகவுண்டரை முதலில் வெட்டியுள்ளார், இதனைப் பார்த்த செல்வமும், மாதுவும் அதனை தடுக்க சென்ற போது அவர்களுக்கும் லேசான அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து அலறல் சத்தம் கேட்டு காவல் நிலையத்திற்குள் இருந்து வெளியே வந்த போலீசார் அரிவாளால் வெட்டிய நபரை மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.


அங்கு, அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே அரிவாள் வெட்டு பட்டு பலத்த காயமடைந்த சின்னராமர், அந்தியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இது குறித்து தகவலறிந்து வந்த இவர்களின் உறவினர்கள் காவல் ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், எதற்காக அந்த நபர் வெட்டினார் ஒருவேளை இவர்கள் மீது புகார் கொடுத்த நபர் வெட்டச் சொன்னாரா என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் வலியுறுத்தினர்.


காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். காவல் நிலையம் முன்பு வைத்தே ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)