சாத்தான்குளம் தந்தை - மகனுக்கு சிகிச்சையளித்த கோவில்பட்டி மருத்துவர்களிடம் சிபிஐ விசாரணை

சாத்தான்குளம் தந்தை- மகன் அடித்து கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக கோவில்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.


சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.


இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜெயராஜ் - பென்னிக்ஸ் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட தினத்தன்று பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


ஏற்கனவே, ஜெயராஜ்-பென்னிக்ஸ் இல்லம், கடை, சாத்தான்குளம் அரசு மருத்துவமனை, கோவில்பட்டி சிறைச்சாலை உள்ளிட்ட இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா