சாத்தான்குளம் பெயரை திருக்கொழுந்தாபுரம் என மாற்ற அரசுக்கு மக்கள் கோரிக்கை: ஊர் பெயரில் பேய் இருப்பதால் மக்கள் அச்சம்!!

சாத்தான்குளம் பெயரை மாற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊர் பெயரில் பேய் இருப்பதால் அச்சம் தெரிவித்துள்ள அவர்கள், 17ம் நூற்றாண்டில் அழைக்கப்பட்ட திருக்கொழுந்தாபுரம் பெயரை சாத்தான்குளத்திற்கு சூட்ட வேண்டும் என்று அரசை வலியுறுத்தி உள்ளனர்.


சாத்தான்குளம் பெயரை கேட்டாலே அதிர்வது மக்கள் மட்டுமல்ல காவல் துறையும் தான். ஜூன் 19ம் தேதி உள்ளூர் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சித்ரவதை செய்து கொல்லப்பட்டனர் என்பது புகார். இந்தியாவைத் தாண்டி ஐ.நா.வின் கவனத்தையும் இச்சம்பவம் ஈர்த்துள்ளதால் வழக்கு, விசாரணை என சாத்தான்குளம் தினமும் பரபரப்பாக காணப்படுகிறது.


சாத்தான்குளம் பெயர் உலகளவில் அடிப்படுவதை உள்ளூர் மக்கள் விரும்பவில்லை. தங்கள் ஊர் பெயரில் சாத்தான் என இருப்பதே இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு காரணம் என குற்றம் சாட்டுகின்றன. சாத்தான் என்பது பேய்யை குறிப்பதால், தங்கள் ஊர் பெயரை மாற்ற வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


17ம் நூற்றாண்டு வரை திருக்கொழுந்தாபுரம் அல்லது வீரமார்த்தாண்ட நல்லூர் என்றே இந்த ஊர் அழைக்கப்பட்டுள்ளது. குலசேகரம் பாண்டியன் ஆட்சியில் சாந்தகுளம் என பெயர் மாற்றப்பட்டது. பின்னர் அதுவே சாத்தான்குளம் என மறுவீவிட்டதாக கூறப்படுகிறது. 2006 வரை சாத்தான்குளம் தனி சட்டமன்றத் தொகுதியாக விளங்கியது. 2011ல் தொகுதி மறு சீரமைப்பில் சிறுவைக் கொண்டம் சட்டமன்ற தொகுதியில் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!