தேவனம்பட்டினம் மீனவர்கள் போராட்டம்.

கடலூர் சுருக்கு பழைய பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீனை மீன்வளத்துறை பறிமுதல் செய்ததை கண்டித்தும் சுருக்குவலை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். தேவனம்பட்டினம் மீனவர்கள் போராட்டம்.


கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலையினை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு தரப்பு மீனவர்கள் சுருக்கு மடி வலை பயன்படுத்தி மீன்பிடிக்க போவதாக எழுந்த தகவலின் அடிப்படையில் சுருக்கு வலையை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களை லாரியில் ஏற்றி செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் லாரிகளை சோதனை செய்தனர்.


இதில் சுருக்கு மடி வலை கொண்டு பிடிக்கப்பட்ட மீன்களை ஏற்றி சென்ற லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் . பின்னர் விடுவித்தனர் .இதனைகண்டித்து இன்று தேவனாம்பட்டினம் கடற்கரையில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலூர் தேவனம்பட்டினம் மீனவர்கள் தங்களது படகுகளை கடலில் நிறுத்தி போராட்டம் நடத்தினர். பின்னர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.


சுருக்குவலை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அனுமதிக்காவிட்டால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். சுருக்குவலை பயன்படுத்த அனுமதிக்கும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர. காலை 7 மணி முதல் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது


தி.இராஜமச்சேந்திரசோழன் மாவட்ட செய்தியாளர்.