பேனாவின் மூலம் பிடிபட்ட கொள்ளைக் கும்பல்: ம.பி.காவல்துறை அதிரடி!

மத்தியபிரதேச மாநிலத்தில் விலை உயர்ந்த பேனாவின் மூலம் கொள்ளைக் கும்பல் ஒன்று காவல்துறையிடம் பிடிபட்டுள்ளது. பெதுல் மாவட்டத்தில் உள்ள மஸ்ஜித் சவுக், பாபு சவுக், சுயோக் காலனி மற்றும் கலபாதா உள்ளிட்ட இடங்களில் கடந்த ஆறு மாதங்களில் சுமார் அரை டஜன் கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன.


இதில் இரு சக்கர வாகனங்கள், மடிக்கணினிகள், செல்போன்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்டிருந்தன. கொள்ளைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் காவல்துறைக்கு கொள்ளையர்கள் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கியாராஸ்பூர் பகுதியில் வசிக்கும் விஷால் குமாரே என்ற நபர் அண்மைக்காலமாக விலையுயர்ந்த பேனா ஒன்றை வைத்துள்ளதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், குமாரேவின் கல்வி மற்றும் ஆளுமைக்கு அந்த பேனா பொருத்தமில்லாத ஒன்றாக இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து குமாரேவிடம் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது. இதில் கடந்த ஜுன் 26-ம் தேதி பேராசிரியர் பி.ஆர். கதார்கரின் வீட்டில் நடைபெற்ற கொள்ளையில் இந்த பேனா கிடைத்ததாக குமாரே கூறியதாக கஞ்ச் காவல் நிலைய பொறுப்பாளர் எஸ்.எஸ். சோலங்கி தெரிவித்துள்ளார்.


கும்பலாக சேர்ந்து இந்த தொடர் கொள்ளைகளை நடத்தியதாக அவர் ஒப்புக் கொண்டதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து குமாரேவின் கூட்டாளிகளான சஞ்சய் பார்தே, உமேஷ் குமாரே மற்றும் ஒரு மைனர் சிறுவனும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 இரு சக்கர வாகனங்கள், மடிக்கணினிகள், செல்போன்கள் மற்றும் பேனா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


உமேஷ் குமாரேதான் இந்த கொள்ளைக் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலை, ஒரு பேனாவை வைத்தே கண்டுபிடித்த கஞ்ச் பகுதி காவல்துறையினருக்கு உயர் அதிகாரிகளும், அப்பகுதி மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)