துப்பாக்கியால் சுட்ட திருப்போரூர் திமுக MLA..! ரியல் எஸ்டேட் மோதலால் பதற்றம்...

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே செங்காடு கிராமத்தில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து தனியார் நிலத்துக்கு சாலை அமைக்க முயன்றதை தடுத்த திமுக எம்.எல்.ஏ வின் தந்தைக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.


தந்தையை வெட்டியவர்களை எம்.எல்.ஏ துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் சாலையில் சென்ற ஒருவர் காயம் அடைந்தார்.


செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே செங்காடு கிராமத்தில் அதிமுக பிரமுகர் தாண்டவ மூர்த்தியின் சகோதரர் குமார் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.


செங்காடு பகுதியில் 350 ஏக்கர் விவசாய நிலங்களை வாங்கி, மொத்தமாக சென்னையை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு விற்றதாக கூறப்படுகின்றது.


இந்த 350 ஏக்கர் நிலத்துக்கும் செல்ல உரிய வழி இல்லாத காரணத்தால் குறைந்த விலைக்கு வாங்கியதாக கூறப்படுகின்றது.


மொத்த நிலத்திற்கும் வாங்கி அதற்கு வேலி போட்டதும் அருகில் உள்ள கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வழி ஏற்படுத்த முயன்றுள்ளார் குமார். அதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு வழி அமைக்க முடியாதபடி வாய்க்கால் தோண்டி போட்டுள்ளனர்.


இதனால் குமார் சாலை அமைக்கும் பணியை கிடப்பில் போட்டதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் குமார், சனிக்கிழமை கண்ணகி நகர் பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட ரவுடிகளை அரிவாள் கத்தியுடன் செங்காடு பகுதிக்கு இரு சக்கரவாகனங்களில் வரவழைத்ததாக கூறப்படுகின்றது.


அவர்களை துணைக்கு வைத்துக் கொண்டு குமார் ஜேசிபி மூலம் கோவில் நிலத்தை சமன்படுத்தி சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளார்.


ஆயுதங்களுடன் நின்ற கூலிப்படையினரை கண்டு அஞ்சி ஊர் மக்கள் ஒதுங்கி நின்ற நிலையில் அந்த தொகுதி ரியல் எஸ்டேட் அதிபரான குமாரின் உறவினரும், திருபோரூர் எம்.எல்.ஏ செந்திலின் தந்தையுமான லட்சுமிபதி என்பவர் தைரியமாக சென்று தட்டிக்கேட்டுள்ளார். அவருடன் ஊர்மக்களும் சென்று சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா