சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முண்டியடித்த கூட்டம் - காற்றில் பறந்த தனி மனித இடைவெளி

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த பொது இடங்களில் தனிமனித இடைவெளி கடைபிடிப்பது, மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரயில் பயணங்களை அனுமதித்தால் நோய்த்தொற்று பரவல் அதிகரித்துவிடும் என்று நாடு முழுவதும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.எனினும், தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.


இந்த நிலையில் சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மேற்கு வங்காளம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு ரயில் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


ஆனால், சமூக இடைவெளி இல்லாமல் கூட்ட நெரிசலுடன் புலம்பெயர் தொழிலாளர்கள் பரிசோதனை செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு ரயில்வே துறை சார்பில் பல்வேறு வழிமுறைகளை ரயில் நிலையங்களுக்கு கொடுத்துள்ளனர் குறிப்பாக சுத்திகரிக்கப்பட்ட பேருந்தில் அழைத்து வரவேண்டும், உடல் வெப்ப நிலையை கண்டறிந்து


அதற்கு பின்பு ரயில் நிலையத்தில் அனுமதிக்க வேண்டும். முழுமையாக சமூக இடைவெளி பின்பற்றியே ரயில் நிலையத்திற்கு வர வேண்டும், ரயிலில் ஏறும் வரையும் அதேபோல சொந்த மாநிலம் செல்லும் வரையிலும் அந்த கட்டுப்பாட்டை மீறக் கூடாது. சிறப்பு ரயிலில் பயணிக்க இரண்டு மாநில அரசுகளிடம் அனுமதி பெறவேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகள் இருக்கின்றன


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு