குரோம்பேட்டை பகுதியில் சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம் - வாகன ஓட்டிகள் அவதி..

சென்னை குரோம்பேட்டை பகுதியில் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. மாநகரில் காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில், பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், திருநின்றவூர், வளசரவாக்கம், போரூர், சைதாப்பேட்டை, மதுரவாயல், அம்பத்தூர், பல்லாவரம், பம்மல், மீனம்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தியாகராயநகர், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.


இதில் குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு மழை நீர் தேங்கியது. இதனால் சாலையை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் திணறிய நிலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


கழிவுநீர் கால்வாயை முறையாக அமைக்காததும், பாதாள சாக்கடைகளை பராமரிக்காததால் கழிவுநீர் சேர்ந்து சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதாக குரோம்பேட்டை பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)