பல முன்னணி இதழ்களுக்கு ஓவியம் வரைந்துகொண்டிருக்கும் ஓவியர் ஸ்யாம் தற்போது,  ‘கட்டில்’ என்ற படத்தில் வில்லனாக நடித்துவருகிறார் என்பது கூடுதல் தகவல்.

அரசியல், சினிமா, சமூகம் என பலத்துறைகளிலுள்ள பிரபலங்கள் ஒரேமாதிரியான முகத்தோற்றம் கொண்டிருப்பதை ஒப்பிட்டு முகநூலில் தொடர்ந்து பதிவுசெய்து அசத்திவருகிறார் பிரபல ஓவியர் ஸ்யாம்.


அதுவும், அவர் வெளியிட்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ் சாயலில் நடிகர் ராஜ்கிரண், அன்னை தெரேசா சாயலில் பாடகி லதா மங்கேஷ்கர், சோனியா காந்தி சாயலில் நடிகை பிரீத்தி ஜிந்தா, ஈழப்போராளி பிரபாகரன் சாயலில் நடிகர் மோகன்லால், இலங்கை அரசியல்வாதி விக்னேஷ்வரன் சாயலில் நடிகர் சத்யராஜ், தெலங்கானா முதல்வர் சாயலில் மிஸ்டர் பீன், நடிகர் பிரஷாந்த் சாயலில் தமிழக சுகாதரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், இதில், யார் கார்த்திக் சுப்புராஜ் யார் குரளரசன் என்று கன்ஃபியூஸ் ஆகும் அளவுக்கு கார்த்திக் சுப்புராஜ்-குரளரசன், நடிகை தபு சாயலில் பூமிகா, விஜய்காந்த் சாயலில் நடிகர் சரவணன், பழம்பெரும் நடிகை ராஜகுமாரி சாயலில் நடிகை ஸ்னேகா, மைக்கேல் ஜாக்சன் சாயலில் சரவணா ஸ்டோர் அருள், கணிதமேதை ராமானுஜம் சாயலில் இசைஞானி இளையராஜா, நடிகர் அஜ்மல் சாயலில் நடிகர் சக்தி, கிரண்பேடி சாயலில் மத்திய அமைச்சர் ப்யூஷ் கோயல், நடிகர் அதர்வா சாயலில் பிக்பாஸ் புகழ் தர்ஷன் என 50 க்குமேற்பட்ட ஒரேமாதிரியான சாயல் கொண்ட பிரபலங்களின் புகைப்படங்களை வெளியிட்டு


ஃபேஸ்புக்கில் பாராட்டுகளை குவித்துவருகிறார் ஸ்யாம்.     இதுகுறித்து, அவரிடம் நாம் பேசியபோது,  “ஒரு குழந்தை பிறந்தவுடனேயே அது அம்மா ஜாடையா அப்பா ஜாடையான்னுதான் பார்க்குறோம். அப்படி, பார்க்குறது மனித இயல்பு. பிரபல நடிகர் நடிகைககள் போல மேடை நாடங்களில் ஆரம்பித்து டிவி, டிக்டாக் என அதேபோன்ற உருவத்தில் இருந்துகொண்டு நடித்துக் காண்பிப்பதை பார்த்திருப்போம். ஓவியர் என்பதால் ஒருவரைப் பார்த்தவுடன் இவர், இவருடைய முக ஜாடைபோல் இருக்கிறதே என்று தோன்றிவிடும்.


எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே அப்படி தோன்றும். ஓவியராக இருப்பதால், அதுகுறித்த பார்வை இன்னும் அதிகமாக இருக்கும்.           புதிதாக ஒரு நடிகரோ, அரசியல்வாதியோ தோன்றினால் இவர், இவர்போல் இருக்கிறாரே என்று மக்கள் பேசிக்கொள்வார்கள். கடந்த, இரண்டு வருடங்களுக்கு முன்பே ஒரே முக ஜாடையுள்ள 100 பிரபலங்களின் புகைப்படத்தை சேகரித்து வைத்தேன். ஆனால், வெளியிடாமல் புத்தகமா போடலாம் என்று எடுத்து வைத்துவிட்டேன்.


ஆனால், கொரோனா சூழலில் முகநூல் நண்பர்கள் ரிலாக்ஸ் ஆகவேண்டும் என்பதற்காக எனது முகநூலில் பதிவு செய்ய ஆரம்பித்தேன். இதுவரை, ஒரேமாதிரியான 60 பிரபலங்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளேன். இன்னும், 40 இருக்கிறது” என்கிறவர், எப்படி கண்டுபிடிக்கிறார் என்கிற சூட்சுமத்தை சொல்கிறார், “நான், ஒருவரைப் பார்த்ததும் அவரது மூக்கையும் முகவெட்டையும் பார்ப்பேன்.


அதைவைத்தே, எளிமையாக கண்டுபிடித்துவிடுவேன்” என்றவரிடம் எல்லாருடைய முகத்தையும் பார்த்து யாருடைய சாயலில் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்கிறீர்களே? உங்களுடைய முகம் யாரைப்போல் இருக்கிறது என்று கண்டுபிடித்தீர்களா? என்று நாம் கேட்டபோது,   ’நீங்களே கண்டுபிடித்து சொல்லுங்கள்’ என்றார். நாம், ‘பாகுபலி’ ஹீரோ பிரபாஸ் போல் இருக்கிறீர்கள் என்றபோது, “ஆம்… பிரபாஸ் போல், இருப்பதாக பலரும் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்” என்று சிரிப்பை உதிர்த்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்