பத்திரிகையாளர்களை மிரட்டி, கருத்துச் சுந்திரத்தை ஒடுக்க நினைக்கும் மாரிதாஸ் என்ற சமூக விரோதி மீது தமிழக அரசு வழக்குப் பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்! - பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் கோரிக்கை!

எதிர்க் கருத்துடையவர்களை இல்லாமல் செய்வதையும், அவர்கள் மீது அவதூறு பரப்புவதையும் மிரட்டுவதையும் வலதுசாரி ஃபாசிச சக்திகள் வழக்கமாக கொண்டுள்ளது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எதிர்க் கருத்துடையவர்கள் கைது செய்யப்படுவதும், பா.ஜ.க வின் மக்கள் விரோத செயல்திட்டத்தை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்கள், சமூக வலைத்தளங்களிலும் பொது வெளியிலும் மிரட்டப்படுவதும், அவர்கள் மீது அருவறுப்பான விமர்சனங்களை முன்வைப்பதையும் வலதுசாரி ஃபாசிசவாதிகள் தாெடர்ந்து செய்து வருகின்றனர்.


நேர்மையாகவும் உண்மையாகவும் செய்திகளை வழங்கும் ஊடகவியலாளர்களை பணியிலிருந்து நிறுத்துவதற்காக இவர்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக தற்போது ஊடகவியலாளர்களை நசுக்கிட வேண்டும் என்ற நோக்கிலும் ஊடகவியலாளர்களையும் ஊடக நிறுவனங்களையும் மிரட்டும் விதத்திலும் இந்துத்துவ ஆதரவாளராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் மாரிதாஸ் என்ற நபர் செய்து வருகின்றார்.


யூடியூப் தளத்தில் பிஜேபிக்கு எதிரான மாற்றுக் கருத்துடையவர்களை தொடர்ந்து தவறாக விமர்சித்து பேசி வரும் மாரிதாஸ், சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் நியூஸ்18 தொலைக்காட்சியில் பணியாற்றும் ஊழியர்கள் மீதும், மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையத்தின் மீதும் அவதூறு பரப்பும் விதமாகவும் மிரட்டும் விதமாகவும் பேசியுள்ளார்.


அத்தோடு மிகக் கேவலமாக ஊடகவியலாளர்களின் குடும்பம் சார்ந்த புகைப்படங்களை வெளியிட்டு அவர்களின் குடும்பத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். இது மிக ஆபத்தானதும் இழிவானதுமாகும். ஆகவே, ஊடகவியலாளர்கள் மீது பகிரங்க மிரட்டல் விடுத்திருப்பதன் மூலம் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்க நினைக்கும் மாரிதாஸ் மீது தமிழக அரசு வழக்குப் பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.


மேலும், சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாகவும் மக்களை திசை திருப்பும் நாேக்கிலும் பொய்யான தகவல்களை தொடர்ந்து வெளியிடுவதோடு, தனக்குப் பிடிக்காதவர்களை மிரட்டும் வகையில் செய்திகளை வெளியிடும் அவரது யூடியூப் பக்கத்தையும் உடனடியாக முடக்க வேண்டும் எனவும் தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றேன்.


பா.ஜ.க ஆட்சியில் நடக்கும் அநியாயங்களை கேள்வி எழுப்புவதோ, அதனை சுட்டிக்காட்டுவதோ கூடாது என்பது தான் மாரிதாஸ் போன்ற வலதுசாரி ஃபாசிசவாதிகளின் நோக்கம். இது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான செயல். இதற்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் குரல் கொடுக்க வேண்டும். அதே சமயத்தில் சுதந்திரமாக செயல்படும் நியூஸ்18 ஊடகவியலாளர்களும், மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையமும் நெஞ்சுரத்துடன் யாருக்கும் அஞ்சாமல் செயல்பட நாங்கள் எப்போதும் உறுதுணையாக நிற்போம் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)