கல்விக்கடன்... கை கொடுக்கும் வங்கிகள்

ஏழை - எளிய மாணவர்களின் கல்விக் கனவை நனவாக்க , வங்கிகளின் கல்விக்கடன், கை கொடுக்கிறது. உயர் கல்வி மாணவர் சேர்க்கை துவங்கியுள்ள சூழலில், கல்விக்கடனை எளிதில் பெறுவது எப்படி? என்பது குறித்து அலசுகிறது, இந்த சிறப்புச் செய்தித்தொகுப்பு


பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் உயர் கல்விக்கான வாய்ப்புகளும், வசதிகளும் குவிந்து கிடந்த போதிலும், கல்விக்கட்டணங்கள் ஏழை - எளிய மாணவர்களை மலைக்க வைக்கிறது.


கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கியுள்ள நிலையில், பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் உயர்கல்வி கனவை நனவாக்க வங்கிக்கடனையே நம்பியுள்ளனர்.


திறமையிருந்தும் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அரசு கல்விக் கடன்களை வழங்கி வருகிறது.


குடும்பத்தில் உள்ள எந்த கடனும் கல்விக்கடனை பாதிக்காது. யுஜிசி அங்கீகாரம் பெற்ற அனைத்து படிப்புகளுக்கும் கல்விக் கடன் வழங்கப்படும்.


4 லட்சம் ரூபாய் வரை, 4 லட்சம் ரூபாய் முதல் ஏழரை லட்சம் ரூபாய் வரை, ஏழரை லட்சம் ரூபாய்க்கு மேல் என 3 வகைகளில் கடன் தொகை வழங்கப்படும். ஏழரை லட்சம் ரூபாய் வரை கடன் தொகை பெற அடமானம் ஏதும் தேவையில்லை.


கல்வி கடன் பெற்றவர்கள் படிக்கும் காலத்திலும், படித்து முடித்த பிறகு ஓராண்டு காலத்திற்கும் வட்டி தொகை செலுத்த வேண்டிய அவசியமில்லை. மானியத் தொகையாக வட்டியை மாநில அரசே செலுத்தி விடும்.


வேலை கிடைத்த பின்னர், கடன் தொகையை தவணை முறையில் செலுத்தலாம். ஏழரை லட்சம் ரூபாய் வரையிலான கடன் தொகையை 4 முதல் 10 ஆண்டுகளில் திருப்பி செலுத்தலாம். ஏழரை லட்சம் ரூபாய்க்கு மேல் பெறும் கடன் தொகையை 15 ஆண்டுகள் வரை செலுத்த அனுமதிக்கப்படும். விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் கல்விக்கடன்அளிக்க வேண்டும் அல்லது நிராகரிப்புக்கு உரிய பதிலை தெரிவிக்க வேண்டும் .


சரியான பதில் கிடைக்காவிட்டால், மத்திய அரசின் https://pgportal.gov.in/ என்ற இணையதளத்தில் புகார்களை தெரிவிக்க வசதி செய்யப்பட்டு உள்ளது,


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)