கல்லூரி மாணவி கொலை... காதல் கொலையாளியின் உறவினருக்கு தர்ம அடி..!

கோவையில் சாதி மறுப்பு திருமணத்துக்கு மறுத்த மாணவியை வீடு புகுந்து குத்திக் கொன்ற வழக்கில் கைதான இளைஞருக்கு ஆடை எடுத்து வந்த உறவினரை மாணவியின் உறவினர்கள் விரட்டி விரட்டி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை மாவட்டம், ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்த வேறு சாதியை சேர்ந்த 17 வயது மாணவியை காதலித்த ரித்தீஷ் என்ற இளைஞர், அந்த மாணவி திருமணத்திற்கு சம்மதிக்க மறுத்ததால் கத்தியால் குத்தி கொலை செய்தார்.


இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பாலக்காட்டில் பதுங்கி இருந்த கொடூர காதல் கொலையாளி ரித்தீஷை கைது செய்த பேரூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வந்தனர்.


அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக ஆடைகள் எடுத்து வரச்சொல்லி அவனது உறவினருக்கு போலீசார் தகவல் கொடுத்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து ரித்தீசுக்கு ஆடைகள் எடுத்து வந்து காவல் நிலையத்தில் கொடுத்து விட்டு அவர் வெளியே வந்ததும், ஆத்திரத்துடன் காத்திருந்த மாணவியின் உறவினர்கள் அவரிடம் வாக்குவாதம் செய்தனர்.


ஒரு கட்டத்தில் கொலையாளிக்கு உடந்தையாக இருந்ததாக குற்றஞ்சாட்டிய பெண்ணின் உறவினர்கள், கொலையாளியின் உறவினரை விரட்டி விரட்டி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் விட்டால் போதும் என தப்பிச்சென்று காவல் நிலையத்தில் ஓடி ஒளியும் நிலை ஏற்பட்டது.


அதற்குள்ளாக காவல் நிலையத்திற்குள் இருந்து வெளியே வந்த காவல் துறையினர் அவரை அடிக்க பாய்ந்தோடியவர்களை எச்சரித்து தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்களை எச்சரித்த காவல் ஆய்வாளர் , பலத்த பாதுகாப்புடன் ரித்தீஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு