நடிகை வனிதா மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ், பாஜக சார்பில் புகார்

சமூகவலைதளங்களில் தஞ்சை மக்களின் வாழ்க்கை முறை குறித்து தவறாக பேசியதாக நடிகை வனிதா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. '


தஞ்சாவூர்க்காரர்கள் இரண்டு மனைவி வைத்துக் கொள்வது எல்லாம் சகஜம் தான் என்றும் தனது தந்தை விஜயகுமாருக்கு கூட, இரண்டு மனைவிகள் தான்' என்றும் நடிகை வனிதா பேசிய வீடியோ, சர்ச்சையை ஏற்படுத்தியது.


இதனைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் வனிதா விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


இதேபோல் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியினரும் புகார் மனு அளித்தனர். தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றி வரும் தஞ்சை மக்களின் மனதை புண்படுத்திய வனிதா விஜயகுமார் உடனடியாக நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்