பத்தாம் வகுப்பு கூட பாஸ் ஆகவில்லை’ - தங்கக் கடத்தல் ஸ்வப்னாவின் தம்பி குற்றச்சாட்டு!

கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை உயர் அதிகாரியான ஸ்வப்னாவின் தங்கக் கடத்தல் விவகாரம், அந்த மாநில அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கி உள்ளது.


கேரளா அரசு அதிகாரிகள் உதவியுடன் ரூ.100 கோடி அளவுக்கு தங்கக் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் எனும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


நாளுக்கு நாள் ஸ்வப்னா சுரேஷைப் பற்றிய தகவல்கள் வெளியாகி கேரள அரசியலில் புயலைக் கிளப்புகின்றன. இந்த சூழலில், அமெரிக்காவில் வசிக்கும் ஸ்வப்னாவின் தம்பியான பிரைட் சுரேஷ் ஸ்வப்னா மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டு பகீர் ரகம்! பிரைட் சுரேஷ் பத்திரிக்கையாளர்களிடம், “நாங்கள் மொத்தம் மூன்று பேர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தான் குடும்பத்துடன் வாசித்தோம்.


17 வயதானபோது நான் அமெரிக்காவுக்கு வந்துவிட்டேன். இங்கேயே செட்டில் ஆகிவிட்டேன். சில வருடங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்தபோது, பொய் வழக்கில் சிக்கவைத்துவிடுவேன் என்று மிரட்டினாள்.


நான் மீண்டும் அமெரிக்காவுக்கே வந்துவிட்டேன். சொத்தில் பங்கு கேட்பேன் என்று பயந்தாள் என் அக்கா. என் அக்கா பத்தாவது கூட பாஸ் ஆகவில்லை.


அவர் தன் செல்வாக்கு மூலம் தான் அரசு வேலையில் சேர்ந்தார்” என்று கூறி உள்ளார். பத்தாவது கூட படிக்காத பெண்ணுக்கு எப்படி அரசுப் பணி கிடைத்தது எனும் கேள்வி தற்போது கேரள அரசியலில் சூறாவளியாக சுழல ஆரம்பித்திருக்கிறது.


இதற்கு முன்பு ஸ்வப்னா பல்வேறு துறைகளில் பணிபுரிந்துள்ளார். அனைத்து, இடங்களில் சர்ச்சை தான். அபுதாபி விமான நிலையத்தில் பணிபுரிந்தவர் தன் கணவரிடத்தில் விவாகரத்து பெற்று கேரளாவுக்கு வந்தார்.


அடுத்து ஏர் இந்தியாவில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு ஒரு அதிகாரி மீது பாலியல் ரீதியாக பொய்ப் புகார் கொடுத்து சிக்கினார்.


அதன்பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரக அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கிருந்து விரட்டப்பட்டவர் கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் மீண்டும் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டார் ஏன் என்று


கேள்வி எழுந்துள்ளது. ஸ்வப்னா எப்படி உயர் பதவியில் நியமிக்கப்பட்டார் எனும் கேள்வி பினராயி விஜயன் தலைக்கு மேலே கத்தியாக தொங்கிக்கொண்டிருக்கும் சூழலில் ‘பத்தாவது கூட என் அக்கா பாஸ் ஆகவில்லை’ எனும் சுரேஷின் குற்றச்சாட்டு கேரள அரசியலில் கடும் புயலை கிளப்பியுள்ளது.