மிதிவண்டியில் சென்று ஆய்வு செய்த திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா

திருச்சி சரகக் காவல்துறைத் துணைத் தலைவர் ஆனி விஜயா, 20 கிலோமீட்டர் தொலைவுக்கு மிதிவண்டியில் சென்று முழு ஊரடங்கு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் காவல் சோதனைச் சாவடிகளில் செய்யப்பட்டுள்ள கண்காணிப்பு ஏற்பாடுகள் குறித்து திருச்சி சரகக் காவல்துறைத் துணைத் தலைவர் ஆனி விஜயா மிதிவண்டியிலேயே சென்று ஆய்வு மேற்கொண்டார்.


திருச்சி விமான நிலையம், செம்பட்டு வழியாகப் புதுக்கோட்டை மாவட்ட எல்லையான மாத்தூர் வரை உள்ள சோதனைச் சாவடிகளுக்குச் சென்று ஆய்வு செய்ததுடன், காவல்துறையினருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.


திருச்சி விமான நிலையத்தில் உள்ள காவல் நிலையம் மாத்தூர் காவல் நிலையம் ஆகியவற்றிலும் ஆய்வு மேற்கொண்டார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)