ஆன்மீகச் சுற்றுலா வந்திருந்த 9 நாடுகளைச் சேர்ந்த 129 முஸ்லிம்களை அவரவர் நாட்டிற்கு விரைவாக அனுப்பி வைக்கின்ற முயற்சிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எல்லா விதமான உதவிகளையும் துரிதமாக செய்து கொடுக்க வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் வேண்டுகோள்
அவர்களில் 20க்கும் மேற்பட்ட மகளிரும் உள்ளனர். அவர்கள்மீது மாநில அரசு 15 வழக்குகளை பதிவு செய்திருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்ட இவர்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பிறகுஇவர்களுக்குப் பிணை மனுத் தாக்கல் செய்யப்பட்ட தருணத்தில் இவர்கள் சைதாபேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்கள். சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் பிணை வழங்கப்பட்ட நிலையில் சென்னை புழல் சிறை வளாகத்தில் உள்ள சிறார் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.