பொதுகழிப்பறைக்களின் தகவல் அறியும் சட்டம் மூலம்.. அவலம் வெட்டவெளிச்சத்தில் வந்தது..

தென்காசி வ ம் வாசுதேவநல்லூர் வார் கே 18-வார்டுகளை கொண்ட 30-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் முதல் நிலை பேரூராட்சியாக உள்ளது.அதே பகுதியைச் சேர்ந்த சமூகசெயற்பாட்டாளர் சுரேஷ் என்ற இளைஞர் 30-06-2020 அன்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் அனுமதி பெற்று பொதுகழிப்பறைகளை ஆய்வு செய்துள்ளார்.


ஒரு தனிமனிதன் நினைத்தால் சமூகத்தில் மாற்றதை கொண்டுவர முடியும் என்று தனியாக களம் இறங்கியுள்ளார். இது சம்பந்தமாக சமூக செயற்பாட்டாளர் தி.சுரேஷ் கூறும் போது வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் மொத்தம் 27-பொதுகழிப்பறைகள் உள்ளது.


அந்த கழிப்பறைகள் சரியாக பராமரிக்காமல் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் கடந்த ஆண்டில் அதிகாரிகளின் அலட்சியத்தால் மிகவும் மோசமாக பராமரிப்பு இல்லாமல் இருந்தது.இது சம்பந்தமாக நான் நேரடியாக மனுகொடுத்தும் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.மனுவுக்கு பதில் மட்டுமே கிடைத்து.


பொது மக்களின் அத்தியாவசிய தேவையாக உள்ள கழிப்பறைகளை முறையாக பராமரிக்காமல் மனு கொடுத்தும் நடவடிக்கையுயம் எடுக்காமல் இப்படி அலட்சியமாக செயல்படுவது அதிர்ச்சியாக இருந்தது. அதனால் மாவட்ட நிர்வாக கவனத்திற்கு கொண்டு செல்ல தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத்து பொதுக் கழிப்பறைகளை ஆய்வுசெய்யவும் மற்றும் போட்டோ வீடியோ எடுக்கவும்


கடந்த 3-10-2019 அன்று திருநெல்வேலி (பேரூராட்சிகள் )உதவி இயக்குநருக்கு பதிவு தபால் மூலம் மனு அனுப்பி இருந்தேன் .உதவி இயக்குநர் பொதுத்தகவல் அலுவலர் என்னுடைய மனுவை வாசுதேவநல்லூர் பேரூராட்சி பொதுத்தகவல் அலுவலருக்கு தகவல் தர சொல்லி அசல் மனுவை அனுப்பி உள்ளதாக பதில் கடிதம்பெற்றேன்.


ஆனால் நாட்கள் கடந்தும் அதன்பின்பு ஆய்வு செய்ய அனுமதி ஏதும் கிடைக்கவில்லை. பின்னர் இந்த தகவலை முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் மனுவாக பதிவு செய்திருந்தேன்.


தற்போது அன்று அனுப்பிய ஆய்வு மனுவற்கு 0-00-2020 அன்று அனும மனுவிற்கு 30-06-2020 அன்று அனுமதி கிடைத்து ஆய்வு செய்யும் போது என்னுடன் பேரூராட்சி மேஸ்திரியும் உடன் வந்திருந்தார் ஆய்வும் செய்யப்பட்டது.


ஆய்வில் குத்தகைக்குவிடப்பட்ட பொது கழிப்பறையில் ரசீது வழங்கப்படுவது கிடையாது, கதவவுகள் அனைத்தும் பழுதடைந்து உள்ளது, மாற்றுதிறனாளிகள் கழிப்பறைகள் எங்கும் பயன்பாட்டில் இல்லை, ஒரு சில பெண்கள் கழிப்பறைகளில் நாப்கின் எரியூட்டும் இயந்திரம் தவிற மற்ற கழிப்பறைகளில் இல்லை, எந்த கழிப்பறையும் வண்ணம் தீட்டப்படுவதில்லை,கழிப்பறைகள் பராமரிப்பு இல்லை,இது சம்பந்தமாக மேற்பார்வை செய்யவேண்டிய மேஸ்திரி சரியாக கண்காணிப்பதில்லை போன்றவை ஆய்வில் தெரியவந்துள்ளது.


இதனிடையில் கடந்த அன்று பேரூராட்சி முன்னால் செயல் அலுவலர் திரு.க.வெங்கட கோபு அவர்கள் கடந்த 2019-ஆம் ஆண்டு 9-வது மாதத்தில் அனைத்து கழிப்பறைகளையும் 4-முறை ஆய்வு மட்டும் செய்துள்ளார் ,பாராமரிக்க எந்த நடவடிக்கையும் இல்லை என்று தேதி வாரியாக தகவல் தந்துள்ளார்கள்.


இது சம்பந்தமாக பேரூராட்சியில் கேட்ட போது கடந்த மாதம் கழிப்பறைகளை பராமரிக்க தீர்மானம் இயற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்கள்.எனக்கு கிடைத்த தகவல்படி இயற்ப்பட்ட தீர்மானத்திற்கு இன்னும் மதீப்பீடு தயார்செய்யவில்லை.எனவே நான் தற்போது மிக விரைவாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் தென்காசி நிர்வாக கவணத்திற்கு இவை அனைத்தும் கொண்டு செல்ல கோரிக்கை மனு அனுப்பி இருக்கிறேன்.


உள்ளூர் அதிகாரிகள் பொதுமக்களின் தேவையை சரிசெய்ய தயாராக இருக்கும் போது மாவட்ட நிர்வாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தகவல் சட்டம் மூலம் பொதுமக்களும் ஆய்வு செய்து தவறை சூட்டிக்காட்டலாம் என்பது தெரியவந்துள்ளது.வாசுதேவநல்லூரில் உள்ள அனைத்து கழிப்பறைகளையும் விரைவாக பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)