தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அமுதா கடந்த 1994 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர். இவர் தற்போது உத்தரகாண்டில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.


இந்நிலையில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பல்வேறு துறைகளில் இணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. அதன்படி, பிரதமர் அலுவலக இணைச் செயலாளர் பொறுப்பில் அமுதா நியமிக்கப்பட்டுள்ளார்.


தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பொறுப்பு வகித்த அமுதா, தற்போது முசோரியில் உள்ள தேசிய நிர்வாக அகாடமியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு