தொழில் மீது கொண்ட ஈடுபாடு.. கேமரா வடிவில் வீடு கட்டியுள்ள புகைப்படக் கலைஞர் தம்பதி..!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த புகைப்படக் கலைஞர் தம்பதியினர், தொழில் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக கேமரா மாதிரியான அமைப்பை கொண்ட வீட்டை கட்டியுள்ளனர்.


பெல்காம் பகுதியை சேர்ந்த ரவி ஹோங்கால் மற்றும் அவரது மனைவி க்ருபா ஹோங்கால், சேர்ந்து கட்டியுள்ள இந்த வீட்டை தங்களது கனவு இல்லம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.


கிளிக் என பெயரிடபட்டுள்ள அந்த வீட்டின் முகப்பானது கேமராவை போன்றே, பக்கவாட்டில் படச்சுருள் வடிவத்தோடு லென்ஸ் மற்றும் பிளாஷ் போன்ற அமைப்பை கொண்டுள்ளது. முன்னதாக இவர்கள் தங்களது


மூன்று பிள்ளைகளுக்கும் பிரபல கேமரா நிறுவனங்களான கேனான், நிகான் மற்றும் எப்சன் போன்றவற்றின் பெயரை சூட்டி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.