மாநிலங்களவை உறுப்பினர்கள் 61 பேர் இன்று பதவியேற்பு

மாநிலங்களவை உறுப்பினர்கள் 61 பேர் இன்று பதவியேற்றுக் கொள்கின்றனர். மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஏற்கனவே பதவியேற்றிருக்க வேண்டிய நிலையில், கொரோனா காரணமாக டெல்லிக்கு போக்குவரத்து வசதி இல்லாததால் பதவியேற்பு தள்ளி வைக்கப்பட்டது.


இந்நிலையில், நிலைக்குழு கூட்டங்களில் பங்கேற்க புதிய உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். திருச்சி சிவா நிலைக்குழுவின் தலைவராக ஏற்கனவே பணியாற்றி வந்தார்.


புதிதாகதேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டபிறகே நிலைக்குழுக் கூட்டங்களில் பங்கேற்க முடியும் என்பதால் புதிய உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க அவைத்தலைவர் வெங்கையா நாயுடு முடிவு செய்துள்ளார்.


அதன்படி 61 பேர் எம்.பி.க்களாக இன்று மாநிலங்களவை நடைபெறும் அரங்கில் பதவியேற்கின்றனர். கூட்டத்தொடர் நடைபெறாத காலத்தில் மாநிலங்களவை நடைபெறும் இடத்தில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பது, நாடாளுமன்ற வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்