மருத்துவமனை ஊழியர் லஞ்சம் கேட்டதால், தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிச் சென்ற 6 வயது சிறுவன்

உத்தரப் பிரதேச மாநிலத்தில், சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல மருத்துவமனை ஊழியர் லஞ்சம் கேட்டதால், ஆறு வயது சிறுவன் தனது தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் தள்ளிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.


தியோரியா மாவட்ட மருத்துவமனையில் முதியவர் ஒருவர் காயத்திற்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு உதவியாளராக இருந்த ஊழியர் முதியவரை ஒவ்வொரு முறையும் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல 30 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் முதியவரின் மகள் அவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து இழுத்துச் செல்ல, பேரன் பின்னால் தள்ளிச் சென்றான்.


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர், பணம் கேட்ட வார்டு உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)