வறுமையில் குடும்பம் ... தந்தைக்கு உதவ டீ விற்ற மாணவன் 6- வது மாடியில் இருந்து விழுந்து பலியான பரிதாபம்

கொரோனா லாக்டௌன் காரணமாக, உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. த


தினக் கூலிகள், அன்றாடங்காய்ச்சிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். லாரிகள், பேருந்துகள் , வேன்கள் போன்ற வாகனங்கள் இயக்கப்படாததால் டிரைவர்களுக்கும் சரியான வருவாய் கிடைப்பதில்லை. அப்படி, வருவாய் இல்லாமல் தவித்து வந்த டிரைவர்களில் ஒருவர்தான் சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்த ஜாகீர் உசேன். இவருக்கு யாஷ்மீன் என்ற மனைவியும் ரியாஸ் , பயாஸ் என்று இரு மகன்கள் உள்ளனர்.


இதில், ரியாஸ் ராயபுரம் மகாநராட்சி தெலுங்கு பள்ளியில் 9- ம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது, கொரோனா லாக்டௌன் காரணமாக டிரைவரான ஜாகிர் உசேனுக்கு போதிய வருமானம் இல்லை. இதனால், குடும்பத்தை நடத்த கஷ்டப்பட்டுள்ளார்.


தந்தையின் கஷ்டத்தை புரிந்து கொண்ட மூத்த மகன் ரியாஸ், பள்ளி விடுமுறை என்பதால், டீ விற்பனை செய்து குடும்பத்துக்கு உதவிக்கரமாக இருந்து வந்துள்ளார். மொத்தமாக ஆர்டர் எடுத்து வீட்டில் டீ தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வது ரியாஸின் வழக்கம். கடந்த 40 நாள்களாக டீ விற்பனை செய்து அதில் கிடைத்த வருமானத்தை தந்தையிடம் கொடுத்து குடும்பத்துக்க ஆதரவாக இருந்து வந்துள்ளார் ரியாஸ்.


இந்தநிலையில் கடந்த 20- ந் தேதி அந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. அன்றைய தினத்தில் மதியம் ரியாஸ் மண்ணடி அரண்மனைகாயர் தெருவில் புதியதாக கட்டப்பட்டு வரும் 7 மாடி கட்டடத்தில் பணி செய்யும் தொழிலாளர்கைளுக்கு டீ விற்பனை செய்ய சென்றுள்ளார். கட்டடத்தில் 7- வது மாடியில் தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர்.


இதனால், சிறுவன் ரியாஸை 7- வது மாடிக்கு வந்து டீ கொடுக்க கூறியுள்ளனர். இதையடுத்து, 7- வது மாடிக்கு சென்று டீ கொடுத்து விட்டு ரியாஸ் கீழே இறங்கி வந்துள்ளார். 6- வது மாடியில் லிப்ட் அமைப்பதற்காக விடப்பட்டிருந்த இடைவெளியில் அருகே நிலை தடுமாறிய ரியாஸ் அதன் வழியாக கீழே விழுந்து விட்டார். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ரியாஸ் இறந்து போனார்.


மகன் இறந்த தகவல் ஜாகீர் உசேன் குடும்பத்துக்கு தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் கதறி துடித்தனர். போலீஸார் மாணவனின் உடலை மீட்டு ஸ்டான்லி மருந்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தன் மகன் ரியாஸ் உயிரிழந்து தொடர்பாக ஜாகீர் உசேன் எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


அதில்‘, கட்டடத்தின் உரிமையாளர் ஷாகுல் அமீது , மேலாளர் அலி ஆகியோர் 7- வது மாடிக்கு அழைத்ததால்தான் என் மகன் மேலே சென்று டீ கொடுத்துள்ளார். கட்டடத்தில் லிஃப்ட் அமைக்க விடப்பட்டிருந்த இடைவெளி அருகே எந்த தடுப்பும் கூட கட்டப்பட்டிருக்கவில்லை. கட்டடம் கட்டியவர்களின் கவனக்குறைவுக்கு என் மகன் பலியாகியிருக்கிறான்'' என்று கூறியுள்ளார்.


போலீஸார் கட்டட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். குடும்ப கஷ்டத்தை உணர்ந்து டீ விற்பனை செய்து தந்தைக்கு ஆதரவாக இருந்த ரியாஸ் கட்டத்தில் இருந்து விழுந்து இறந்த சம்பவம் மண்ணடி பகுதி மக்களை சோகதிற்குள்ளாக்கியுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா