தமிழகத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட 51 போலீஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த போலீஸ அதிகாரிகள் 51 பேரை, இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சிலருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.


கரூர் மாவட்ட எஸ்.பி.,யாக பகலவன் நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.,யாக ரவளி பிரியா நியமினம் செய்யப்பட்டுள்ளார். சென்னை அடையாறு துணை கமிஷனராக விக்ரமனும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனராக தீபா சத்யனும், சென்னை போலீஸ் நிர்வாக பிரிவு எஸ்.பி.,யாக சிபி சக்ரவர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்.பி.,யாக பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்.பி.,யாக ராஜேந்திரனும், சிறப்பு பிரிவு எஸ்.பி.,யாக ஸ்டீபன் ஜேசுபாதமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Tamil News Tamil News திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.,யாக மணிவண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை சி.ஐ.டி., சிறப்பு பிரிவில் இருந்த அரவிந்த், திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.,யாகவும், திருச்சி எஸ்.பி.,யாக இருந்த ஜியாவுல் ஹக், கள்ளக்குறிச்சி எஸ்.பி.,யாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.