ஊரடங்கால் கையில் காசு இல்லை... ரூ. 5 கோடி கேட்டு நகைக்கடை அதிபரை கடத்திய கும்பல் சிக்கியது எப்படி..

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த அத்திவெட்டு பகுதியை சேர்ந்த ஆனந்தும் மாதாக்கோட்டையை சேர்ந்த சின்னையன் என்பவரும் நண்பர்கள் . இருவரும் அவ்வப்போது கூட்டு கொள்ளையில் ஈடுபடுவது வழக்கம். கொரோனா ஊரடங்கால் கையில் பணமில்லாமல் தவித்த


இவர்கள், திருவோணம் பகுதியை சேர்ந்த மதிவதனிடத்தில் கொள்ளையில் ஈடுபடுவது குறித்து ஆலோசனை கேட்டுள்ளார். 'இப்போது, நகைக்கடை அதிபர்களை கடத்தினால் நல்ல காசு பார்க்கலாம் என்றும் ஊரணிபுரம் விநாயகர் ஜூவல்லர்ஸ் அதிபர் சீமானை எளிதாக கடத்தி விடலாம்' எனவும் மதிவதனன் ஐடியா கொடுத்துள்ளார். ஊரணிபுரம் ஜூவல்லரி அதிபர் சீமான் தினசரி வாக்கிங் செல்வது வழக்கம். எனவே, நடைபயிற்சி செல்லும் போது, அவரை கடத்த திட்டமிட்டுள்ளனர்.


கடந்த 21- ந் தேதி நடைபயிற்சியில் மேற்கொண்டிருந்த சீமானை இந்த கும்பல் கடத்தியுள்ளது. நீண்ட நேரமாக வீட்டுக்கு திரும்பாததால் சீமானின் மனைவி அவருக்கு போன் செய்துள்ளார். ஆனால், சீமானின் போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் அதிர்ச்சியடைந்தார்.


பிறகு உறவினர்களுக்கும் சீமானின் மனைவி தகவல் கொடுக்க நகைக்கடை அதிபர் காணாமல் போனது குறித்து திருவேணம் போலீஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.


சீமான் நடைபயிற்சி மேற்கொண்ட பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராவை போலீஸார் ஆராய்ந்த போது வெள்ளை நிற கார் ஒன்றில் அவர் ஏறி செல்வது தெரிய வந்தது.


இதையடுத்து, நகைக்கடை அதிபரை கண்டுபிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதற்கிடையே, போலீஸார் தங்களால் கடத்தப்பட்ட சீமானை தேடுவதை அறிந்து கொண்ட கடத்தல் கும்பல், சீமானை ' உன் குடும்பத்தார் கொடுத்த புகாரை வாபஸ் வாங்குமாறு மிரட்டியுள்ளனர்.


இதையடுத்து , தன் சகோதரருக்கு போன் செய்த சீமான், 'நான் பத்திரமாக இருக்கிறேன் நீ போலீஸில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கு' என்று கூறியிருக்கிறார்.


இதற்கிடையே போலீஸ் தேடுவதால் பயந்து போன கடத்தல் கும்பல் சீமானை நாகப்பட்டினத்தில் 22- ந் தேதி இறக்கி விட்டு தப்பியுள்ளனர். பின்னர் போலீஸார் சீமானை மீட்டனர்.


போலீஸார் நடத்திய விசாரணையில் தன்னை திருவழிஞ்சுழி என்ற இடத்தில் அடைத்து வைத்து 20 ரூபாய் பத்திரத்தில் கையொப்பம் வாங்கியதாகவும் ரூ. 5 கோடி கேட்டு மிரட்டியதாகவும் சீமான் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, தனிப்படை போலீஸார் விரைந்து செயல்பட்டு கடத்தல் கும்பலைச் சேர்ந்த குணசேகர், சின்னையன், பிரகாஷ், ஆனந்த் , கதிரவன், மதிவதனன் ஆகியோரை நேற்று மாலை கைது செய்தனர்.


மதிவதனின் வீட்டிலிருந்து நகைக்கடை அதிபர் சீமானிடத்தில் கையெழுத்து பெற்ற பத்திரங்கள், செல்போன்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளை கும்பலிடத்தில் போலீஸ் நடத்திய விசாரணையில் சீமான் தவிர மேலும் இரண்டு நகைக்கடை அதிபர்களை கடத்த திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது. கைது செய்யப்பட்டவர்கள் தஞ்சை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா