யூ ட்யூபர் மாரிதாஸ் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு

போலி இமெயில் மூலம் மோசடி செய்ததாக தனியார் தொலைக்காட்சி நிர்வாகி கொடுத்த புகாரின்பேரில், யூ ட்யூபர் மாரிதாஸ் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


அண்மையில் போலி இமெயில் ஒன்றை வைத்து தவறான தகவலை பரப்பி மோசடியில் ஈடுபட்டதாக, மாரிதாஸ் மீது தனியார் தொலைக்காட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.


இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், 5 பிரிவுகளின் கீழ் மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


ஆவணங்களை பொய்யாக புனைவது, பொய்யாக புனையப்பட்ட டிஜிட்டல் ஆவணத்தை உண்மையானது போல காட்டுவது, நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போலி ஆவணம் தயாரிப்பது மற்றும் தகவல் தொழில் நுட்பங்களை தவறாக கையாள்வது தொடர்பான 2 சட்டப் பிரிவின் கீழ் மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதனிடையே தனக்கு வந்த இமெயிலையே தான் வெளியிட்டதாகவும் அதனை போலியாக உருவாக்கி அனுப்பியவர்களை போலீசார் தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று மாரிதாஸ் கூறியுள்ளார்.


Popular posts
கடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்-மீது நடவடிக்கை எடுக்க ஹெல்த் அமைச்சருக்கு கோரிக்கை!
Image
அரக்கோணம் அடுத்த சோகனூர் அருகே அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்
Image
பாதிரியாரை கைது செய்வதற்கு முன்பு வாடிகன் போப்பிடம் அனுமதி வாங்கனும் : அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் அமைச்சரின் மருமகள்..!!
Image
முகக்கவசம் அணியாத நபரை வெளுத்து வாங்கிய எஸ்.ஐ : காவல்துறையினருக்கு எதிராக குவியும் கண்டனம்!!!
Image
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image