4 மாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்தும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியவர்!

தெற்கு டெல்லியில் உள்ள குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்த நபர் ஒருவர் சுற்றுச்சுவரில் அமைக்கப்பட்டிருந்த கம்பியில் சிக்கி காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.


தெற்கு டெல்லியின் மால்வியா நகரில் உள்ள ஆஸ்தா அடுக்குமாடி குடியிருப்பில் 40 வயது மதிக்கத்தக்க கிஷன் குமார் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் நேற்று 4 மாடிகளை கொண்ட அந்த வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று மழை நீர் குழாயில் அடைப்பு ஏதேனும் உள்ளதா என சோதனை செய்ய முற்பட்டுள்ளார்.


அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி மாடியின் உச்சியில் இருந்து கீழே விழுந்துள்ளார். ஆனால் அவரது உடல் தரைப்பகுதிக்கு செல்லும் முன்னர் சுற்றுச்சுவரில் அமைக்கப்பட்டிருந்த கம்பிகளில் கால்சிக்கியதில் கீழே விழுகாமல் தலைகீழாக தொங்கினார்.


இருப்பினும் அந்த கம்பிகளில் கால் சிக்கியதில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் ஒரு வெல்டரை அழைத்து கிரில் கம்பிகளை அறுத்து, பின்னர் அந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து தெரிவித்துள்ள காவல்துறையினர் மாடியில் இருந்து விழுந்த அவர் தரையில் விழுகாமல் உயிர் தப்பினாலும் அவரது காலில் கம்பிகள் நுழைந்து தலைகீழாக தொங்கவிடப்பட்டார். இருப்பினும் அவர் சீராக குணமடைந்து வருவதாக தெரிவித்தனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!